சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் பரவும் இன்புளுயன்சா.. புதுச்சேரி போல பள்ளிகளுக்கு விடுமுறையா? என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்புளுயன்சா காய்ச்சல் அதிக அளவில் பரவ தொடங்கி உள்ளது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் குணம் கொண்டது.

பருவநிலைதான் இன்புளுயன்சா பரவ முக்கிய காரணம். இன்புளுயன்சா ஏற்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்தால் அவருக்கு இந்த காய்ச்சல் ஏற்படும். இன்புளுயன்சா உள்ளவர்கள் அருகில் இருந்தால் அவர்களுக்கும் இன்புளுயன்சா பரவ வாய்ப்புகள் உள்ளது.

கோவை மாவட்ட திமுக 5-ல் இருந்து 3ஆக குறைப்பு! 2 நிர்வாகிகளுக்கு கல்தா! செந்தில்பாலாஜியின் ஹிட் லிஸ்ட்கோவை மாவட்ட திமுக 5-ல் இருந்து 3ஆக குறைப்பு! 2 நிர்வாகிகளுக்கு கல்தா! செந்தில்பாலாஜியின் ஹிட் லிஸ்ட்

சீசன்

சீசன்

இது சீசனுக்கு சீசன் ஏற்படும் காய்ச்சல் ஆகும். தொண்டை வலி, உடல் வலி, லேசான இருமல் , லேசான தலைவலி , விட்டு விட்டு காய்ச்சல் ஆகியவை இதன் காரணமாக ஏற்படும். இதுதான் பொதுவான இன்புளுயன்சா அறிகுறிகள். கொஞ்சம் வீக்காக இருக்கும் நபர்களுக்கு தீவிர அறிகுறிகள் வரலாம்.குழந்தைகள் அதிக அளவில் இந்த இன்புளுயன்சா காரணமாக பாதிக்கப்படுவார்கள். இந்த காய்ச்சல் வந்ததும் மருத்துவரை அணுகி, முறையாக சிகிச்சைகளை பெற வேண்டும்.

 பள்ளிகள்

பள்ளிகள்

புதுச்சேரியில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவியது. கடந்த 12 நாட்களாக பள்ளி செல்லும் 50 சதவிகித குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களுக்கு தொண்டை வலி, உடல் வலி, லேசான இருமல் , லேசான தலைவலி , விட்டு விட்டு காய்ச்சல் போன்றவை ஏற்பட்டன. பலர் இதனால் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பல பள்ளிகளில் குழந்தைகள் வருகை 50 சதவிகிதத்திற்கும் கீழ் சென்றது.

விடுமுறை

விடுமுறை

இதனால் புதுச்சேரி, காரைக்காலில் குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. 25ம் தேதி வரை அங்கு பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் உள்ள குழந்தைகளை உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிலும் இந்த காய்ச்சல் பரவுகிறது.

விடுமுறை விடப்படுமா?

விடுமுறை விடப்படுமா?

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில், இதுவரை மாநிலத்தில் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். குழந்தைகளுக்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. தமிழ்நாட்டில் காய்ச்சல் தீவிரம் அடையாததால், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று அறிவித்துள்ளார்.

English summary
Tamilnadu school leave due to fever: Amid the rising cases, will the students get holiday due to influenza?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X