புரட்டாசியில் பிறந்தால் புரட்டி போட்ருவாங்களோ? புரட்டாசி மாதம் பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டசாலியாம்
சென்னை: புரட்டாசியில் பிறந்தால் குடும்பத்தையே புரட்டி எடுப்பார்கள் என்பார்களே, அது உண்மையா? புரட்டாசியில் குழந்தை பிறப்பதை பலரும் விரும்பாததற்கு என்ன காரணம்? புரட்டாசியில் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் எதிர்கால வாழ்வு என்னாகும்? புரட்டாசி மாதம் பிறந்தவர்களுக்கு நோய் நொடி, குடும்பம், தொழில், போன்றவை அனைத்தும் எப்படி இருக்கும்? இதுகுறித்தெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
புரட்டாசியில் பிறந்தவர்கள் புரட்டி போட்டுவிடுவார்கள் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை என்கிறார்கள் நிபுணர்கள்.. காரணம், இந்த மாதத்தில் தான் திருப்பதி ஏழுமலையான் அவதரித்தார். சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்க கூடிய மாதமும் இதுதான்..

இந்த புரட்டாசியில்தான் மழைக்காலம் ஆரம்பமாகிறது.. அதுவரை வெயிலின் தாக்கம் பூமியில் அதிகரித்து காணப்பட்டு, உஷ்ணமாக இருக்கும்.. இதற்கு பிறகுதான் பூமி குளிர்ந்து மழை பொழிய துவங்கும்.. முதல் மழை என்பதால், பச்சிள குழந்தைகளுக்கு நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதிர்ஷ்டசாலிகள்
அதனால்தான், புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறப்பதை பெரியவர்கள் பலரும் விரும்புவதில்லை. ஆனால், புரட்டாசியில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம்.
புரட்டாசியில் பிறந்தவர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள். இந்த நேர்மை நிறைய பேருக்கு பிடிக்காமல் போய்விடும்.. இதனால் பகை, மனக்கசப்பு ஏற்படும்.. மற்றவர்களை புகழ்ந்தோ, முகஸ்துதி செய்தோ, குறுக்கு வழிகளை கடைப்பிடித்தோ காரியத்தை சாதித்து கொள்ள மாட்டார்கள்..
புரட்டாசி மாதம் பிறந்த குழந்தைகள்
அவசரப்படாமல் தெளிவாக பேசி எதையும் முடிவெடுக்கக்கூடியவர்கள்.. இயற்கையை ரசிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.. புதன் கிரகத்தின் ஆளுமை கொண்ட மாதமாகவும் புரட்டாசி விளங்குவதால், இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் எளிதாக கற்றுக் கொள்ளக்கூடிய புத்திக்கூர்மை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
புரட்டாசியில் பிறந்தவர்கள் சிறந்த பேச்சாளராகவும் இருப்பார்கள்.. இதனால், நயமாக பேசி மற்றவர்களைத் தம்வசமாக்கிக் கொள்வார்களாம். கலாரசிகர்களாகவும், கற்பனா சக்தியும் நிறைந்தவர்களாகவும், கவி பாடுபவர்களாகும், கதைகளை எழுதக்கூடியவர்களாகும் இருப்பார்கள்.. இவர்களது எழுத்துக்கென்றே தனி நடை இருக்கும்.. இதனால் மற்றவருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவார்கள்..
இயற்கை பிரியர்கள் என்பதால், நீர்வீழ்ச்சிகள், மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல விரும்புவார்கள்... சுவையான உணவு என்றால் அதிக பிரியமாக சாப்பிடுவார்கள்..
புரட்டாசியில் பிறந்தவர்களின் ஆன்மீக குணம்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால், முக்கிய விரதங்கள், பண்டிகைகள் இந்த மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.. எனவே, இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே ஆன்மீக குணம் அமையப்பெற்றவர்களாக இருப்பார்களாம்...
கொடுத்த வாக்கை காப்பாற்றும் உறுதி படைத்தவர்கள்.. புரட்டாசியில் பிறந்தவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் தன்மையும் அதிகமாக இருக்கும்.. இந்த குணத்துக்காகவே இவர்களிடம் நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.. எதையும் வெளிப்படையாகவும் பேசிவிடுவது இவர்களுடைய பிளஸ் பாயிண்ட்டாகும்..
யோகம் - கடன் பிரச்சனை
எதையுமே தீர யோசித்து முடிவெடுப்பவர்கள் என்பதால், பெரும்பாலும் கடனில் சிக்கி கொள்ள மாட்டார்கள்.. சுயகவுரவம் அதிகமாக பார்க்கக்கூடியவர்கள் என்பதால், கடன் வாங்கினாலும், அதை உரிய முறையில் உடனடியாக அடைத்துவிடக்கூடியவர்கள்..
யோகக்காரர்களான இவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் சம்பாதிப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் தாய் வழியில் சேரும்,.. மனைவி வழியிலும் சொத்துக்கள் சேரும். ஒருவேளை சூரியன் சாதகமாக இருந்தால் அப்பா வழியிலும், சந்திரன் சாதகமாக இருந்தால் அம்மா வழியிலும் சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது.
நரம்பு பிரச்சனைகள்
புரட்டாசியில் பிறந்தவர்கள், மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை சரியாக கணித்து விடுவார்கள்.. ஆனால், இவர்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது.. அவர்களது குணநலன்களையும் லேசில் புரிந்து கொள்ள முடியாது.
புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் எளிதில் டென்ஷன் ஆகக்கூடியவர்கள்.. இதனால் நரம்பு பிரச்சனை, தலைவலி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.. சிலருக்கு பார்வை கோளாறும் ஏற்படலாம்.. நேரத்துக்கு சாப்பிடாதவர்களுக்கு வயிறு உபாதைகளும் வரலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications