தேர்தல் ஆணையத்திற்கு வேட்டு! அந்தக் குழு யார்? ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பரிதாபங்கள்..!
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன? எதற்காக அதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன? அதைப் பற்றி பீட்டர் அல்போன்ஸ் சில விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்.
’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இப்போது ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களின் அரசுகளில் நிலை கேள்விக் குறியாக மாறி இருக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் ஒரு தேர்தல் நடைபெற்று அதில் வெற்றி பெறும் கட்சிக்கு 5 ஆண்டுகள் ஆளும் அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன. மேற்கொண்டு 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடைபெற்றுப் பல கட்சிகள் ஆட்சிப் பொறுப்பிலிருந்து வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தை பாஜக ஆட்சி செய்கிறது என்றால் தெலங்கானாவைக் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. தமிழ்நாட்டில் திமுக ஆளுகின்றது என்றால் மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் ஆண்டு வருகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு இயங்கி வருகிறது என்றால் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இப்படி மாநில அரசாங்கத்தின் அதிகாரம் பல கட்சிகளில் கைகளில் உள்ளது. ஆந்திராவில் இப்போதுதான் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. அதற்கு இன்னும் 4 ஆண்டுள் மேலாக பதவிக் காலம் இருக்கிறது. ஜார்கண்ட்டில் சமீபத்தில்தான் தேர்தல் நடைபெற்று ஹேமந்த் சோரன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பதவிக் காலம் 5 ஆண்டுகள் இருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காரிருள் என வருகிறது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயகச் சக்திகள் ஒன்றிணைவோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான கொள்கைத் திட்டத்தை பாஜக அரசு சில ஆண்டுகள் முன்னதாக முன்வைத்த போதே திமுக அதனை எதிர்த்தது. திமுக மட்டுமல்ல; அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இதனை எதிர்க்கவே செய்கின்றன.
இதில் அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன? அதைப் பற்றி சில விளக்கங்களை அளித்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ். அவர், “முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 'ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றி ஒரு அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது. அதில், இந்தத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றால், அரசியலைப்புச் சட்டத்தில் மொத்தம் 17 திருத்தங்களைச் செய்ய வேண்டு உள்ளது.
அப்படி எனில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியையே மாற்றி அமைக்கவேண்டி வரும். இதனால் தேர்தல் செலவுகள் குறையும் என்று சொல்கிறார்கள். 2019 தேர்தலுக்காக 3750 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. அதற்கு முன்பு 1500 கோடிதான் செலவாகியுள்ளது. இந்த விவிபேட் சேர்த்ததால் 3750 கோடி செலவு அதிகரித்துள்ளது. மத்திய அரசு நிதிநிலையுடன் ஒப்பிடும் போது புள்ளி 02 தான் செலவு. இது பெரிய செலவு அல்ல. மாநில அரசுகளில் தேர்தல் செலவை மத்திய அரசு செய்வதில்லை. அந்தந்த மாநிலங்கள்தான் செய்கின்றன. அப்படி என்றால், மத்திய அரசு முன்வைக்கும் வாதம் அடிப்பட்டுப் போய்விடுகிறது” என்று பேசி இருக்கிறார்.
1951 முதல் 1967 வரை அப்படித்தான் இருந்தது. அதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் நடைமுறை முதன்முதலாக தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்றன. இடையில் சில மாநில அரசுகளை மத்திய அரசு சட்டப் பிரிவு 356 ஐ பயன்படுத்திக் கவிழ்க ஆரம்பித்த பிறகு இந்த நிலை மாறியது.
மத்திய அரசு அமைத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அளித்துள்ள பரிந்துரையில் இதைக் கண்காணிக்க ஒரு தனிக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்துள்ளது. அந்தக் குழு யார்? அதன் அங்கத்தினரை யார் நியமிப்பது? அப்படி எனில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன? அதன் அதிகாரத்தில் குறுக்கிடும் நிலை உருவானால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படுமா? ஆகிய கேள்விகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்து வாதிட்டு வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையில் தேர்தல் நடந்த பிறகு ஒரு மாநிலத்தில் ஏதேனும் அரசியல் நெருக்கடியால் ஆட்சி கவிழும் நிலை வந்தால், அடுத்து 5 ஆண்டுகள் வரை அங்கே தேர்தல் நடைபெறாதா? இடைப்பட்ட காலத்தில் அங்கே ஆளுநர் ஆட்சி நடைபெறுமா? எனப் பல சந்தேகங்களுக்கு மத்திய அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications