இத்தனை காலம் அமித் ஷா செய்த ஆபரேஷனை.. கையில் எடுக்கும் காங்கிரஸ்.. ஜூன் 4க்கு பின் சீனே மாறுது
சென்னை; 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த பின் தேசிய அளவில் காட்சிகள் மாறும், அரசியல் கூட்டணிகளும் மாறும் என்று காங்கிரஸ் கட்சி தீவிரமாக நம்பி வருகிறதாம்.
லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி அதிகபட்சம் இடங்களை வெல்லும். பாஜகவின் என்டிஏ கூட்டணியை விட அதிக இடங்களை வெல்லும். அதன் பிறகு பிரதமர் தேர்வு குறித்து முடிவெடுக்க 48 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகலாம் என்றும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் அதிகபட்ச இடங்கள் உள்ள கட்சி பிரதமர் பதவிக்கு இயற்கையாக உரிமை கோரும். இந்தியா கூட்டணிதான் அதிக இடங்களை வெல்லும். இந்தியா கூட்டணி அதிக இடங்களை வென்றதும் என்டிஏ கூட்டணி தானாக உடையும். என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகள் தானாக இந்தியா கூட்டணிக்கு செல்லும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தெரிவித்தார்.
காங்கிரஸ் எடுக்கும் ஆபரேஷன்: 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த பின் தேசிய அளவில் காட்சிகள் மாறும், அரசியல் கூட்டணிகளும் மாறும் என்று காங்கிரஸ் கட்சி தீவிரமாக நம்பி வருகிறதாம்.
அதாவது பாஜக கூட்டணியை உடைக்கும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளதாம். பொதுவாக அமித் ஷாதான் கூட்டணிகளை உடைக்க, ஆப்ரேஷன் கமலா செய்ய பிரபலம் ஆனவர். பல மாநில அரசுகள் மாற அமித் ஷா காரணம் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் என்டிஏ கூட்டணியை உடைக்க காங்கிரஸ் திட்டமிடுகிறதாம். காங்கிரஸ் நிர்வாகிகள் கூற்றுப்படி, என்டிஏ என்பது கொள்கை கூட்டணி அல்ல.
பாஜகவிடம் பலம் இருக்கிறது. அசுர பலம் இருக்கிறது என்பதால் அவர்களுக்கு பயந்து கொண்டு அமைக்கப்பட்ட கூட்டணிதான் என்டிஏ கூட்டணி. பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி இல்லை என்று தெரிந்தால் அவர்கள் உடனே பாஜக கூட்டணியை முறிப்பார்கள். இது பயத்தால் வந்த கூட்டணி. பாஜகவிற்கு பலம் இல்லை என்று தெரிந்ததும் கூட்டணி கண்டிப்பாக உடையும்.
இதை பயன்படுத்தி என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளும் கண்டிப்பாக இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கும். தாமரை சின்னத்தில் நிற்காத கட்சிகளை எல்லாம் கூட்டணிக்கு கொண்டு வருவதே எங்களின் நோக்கம். அதற்கான பணிகளை கண்டிப்பாக செய்வோம். இதற்காக எம்பிக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும் நாங்கள் ரெடி, என்று காங்கிரஸ் நிர்வாகிகள் நம்புகிறார்களாம்.
2004 சம்பவம்: 2004 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 145 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. பாஜக 138 இடங்களை வென்றது. சிபிஐ(எம்) 43 இடங்களை வென்றது. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. பாஜகவுடன் அப்போது கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயாராக அப்போது இல்லை.
அதேபோல்தான் இந்த முறையும் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக என்டிஏ கூட்டணி உடையும். என்டிவில் உள்ள கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு வரும். அதை மனதில் வைத்தே . என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகள் தானாக இந்தியா கூட்டணிக்கு செல்லும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது..












Click it and Unblock the Notifications