கரண்ட் பில் கட்டணம் குறைகிறதா.. சமையல் கேஸ் + மளிகையின் விலை.. தமிழக ஹோட்டல் ஓனர்களின் பகீர் முடிவு
சென்னை: எகிறி கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுக்கு நடுவே, ஓட்டல் ஓனர்கள் தரப்பில் இருந்து முக்கிய கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை 110 -ஐ தாண்டி செல்கிறது. அதேபோல, பச்சை மிளகாய் உட்பட காய்கறிகளின் விலையும் 100 ரூபாயை நெருங்கியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை உயர்வு: இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை பார்த்து பார்த்து வாங்கி பாதுகாத்து பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில், காய்கறி விலையை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் சேர்ந்துகொண்டதால், ஹோட்டல் உரிமையாளர்கள் விழிபிதுங்கி வருகிறார்கள். இதனால், ஓட்டல் பொருட்களின் விலையும் உயர போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கடும் சுமையை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்... ஏற்கனவே, மின் கட்டணத்துக்காக 40 சதவீதம் அளவுக்கு கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்பும் ஹோட்டல் உரிமையாளர்கள், வணிக சிலிண்டர்களின் விலை 8 ரூபாய் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்..
சமையல் கேஸ்: ஆக, காய்கறி + கரண்ட்பில் + கேஸ்விலை + காய்கறி விலை + தக்காளி விலை + மளிகை பொருட்கள் விலை என அனைத்தும் சேர்ந்து, சமையல் செய்வதற்கான செலவை அதிகப்படுத்துவிட்டதாக கலங்கி சொல்கிறார்கள்.. 1500 பேருக்கு சமையல் செய்ய 10 சிலிண்டர்கள் தேவையாக உள்ளது.. ஆனால், இப்போதைய விலை உயர்வால் ஒரு நாளைக்கு ரூ.80 கூடுதல் செலவு ஆகிறது என்றும், மாதத்துக்கு 2500 ரூபாய் வரை சமையல் செலவு அதிகரித்து இருப்பதால் இது சுமையாக உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி சொல்லும்போது, ஓட்டல் உரிமையாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும். காய்கறி விலை உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக ஓட்டல் தொழில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வு: மின்கட்டண உயர்வு, வரிகள் போன்றவற்றால் ஓட்டல் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளோம். இப்போது மதிய சாப்பாட்டின் விலை 100 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரையில் இருக்கிறது. காய்கறி விலை, பருப்பு விலை, சிலிண்டர் விலை, மின் கட்டண உயர்வு போன்றவற்றின் காரணமாக இதே விலைக்கு சாப்பாட்டை கொடுக்க முடியுமா? என தெரியவில்லை.

அதே நேரத்தில், பொதுமக்களின் தலையில் இந்த விலை உயர்வை சுமத்தவும் நாங்கள் தயாராக இல்லை. விலைவாசி குறையுமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
எதிர்பார்ப்பு: நிலைமை இப்படியே சென்றால் ஓட்டல் உணவு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயமே ஏற்படும்" என்றார். மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைய ஓட்டல்கள் சங்கம் முன்வைத்துள்ள நிலையில், இதை அரசு பரிசீலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications