ஸ்ட்ரெயிட்டா திமுகவை அட்டாக் செய்த ராமதாஸ்.. "இன்னும் என்னென்ன சீரழிவை பார்க்க ஆசை?".. ஒரே போடு
டாக்டர் ராமதாஸ் திமுக அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: செங்கல்பட்டு பஸ்ஸில், பள்ளி மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ வெளியாகிய நிலையில், தமிழகமே அதிர்ச்சியில் உள்ளது.. "இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது" என்று டாக்டர் ராமதாஸ் திமுகவை பார்த்து காட்டமாக கேட்டுள்ளார்.
2 நாட்களாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மாணவிகள் பீர் குடிக்கும் வீடியோ அது..
அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது மாணவிகள் பீர் பாட்டிலை அசால்டாக தூக்கிப்பிடித்து குடிப்பதும், போதையில் கூச்சலிட்டு, ரகளை செய்வதும் என அந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விசாரணைகள்
இது தொடர்பாக விசாரணைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், கண்டனங்கள் ஏராளமாக குவிந்து வருகிறது. அந்த வகையில், டாக்டர் ராமதாஸ் முதல் நபராக இந்த விஷயத்தை கிளப்பி உள்ளார்.. இதற்கு காரணம், பல வருடங்களாகவே மதுக்கடைகளை மூட வலியுறுத்தி வந்து கொண்டிருக்கும், முக்கியமான தலைவர் ராமதாஸ்தான்.. இந்த நேரத்தில் ஒரு முக்கியமான சம்பவத்தை இங்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது.

போனில் ஸ்டாலின்
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற சமயம், கொரோனா பாதிப்பு தீவிரத்தில் இருந்ததால், மதுக்கடைகள் மூடும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.. அந்த நேரத்தில்தான் ராமதாஸ் ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. அதில், "மதுக்கடைகள் இல்லாமலும் அரசுக்கு வருமானம் ஈட்ட முடியும்" என்பதை விவரித்து பல வழிமுறைகளையும் அதில் எடுத்துரைத்திருந்தார்.

ராமதாஸ் - ஸ்டாலின்
இதையடுத்து ராமதாஸுக்கு போனை போட்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.. "அய்யா.. அறிக்கையை படிச்சேன்.. நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீங்க. மதுக்கடைகளை ஒழிக்கணும்குறதுதான் என் கொள்கையும்.." என்று ஸ்டாலின் சொல்ல, அதற்கு ராமதாஸோ, "கடந்த வருடம் லாக்டவுன் சமயத்திலேயே டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி கேட்டிருந்தேன்... இப்ப நீங்க மூடியிருக்கிறது நல்ல விஷயம்... மூடினது மூடின மாதிரியே இருக்கட்டுமே" என்று ஒரு கோரிக்கையையும் ராமதாஸ் வைத்திருந்தார்.

காட்டமான அறிக்கை
இந்நிலையில்தான், ஒரு காட்டமான அறிக்கையை ராமதாஸ் விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி, ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்து விட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

பள்ளி மாணவிகள்
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலியில் மாணவிகள் நின்று கொண்டு ஒரு பாட்டில் மதுவை பகிர்ந்து குடிக்கின்றனர். அவர்களுடன் மாணவர்களும் இருக்கின்றனர். அந்த காணொலியை பார்க்கும் பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். பள்ளிகளுக்கு செல்லும் தங்களின் குழந்தைகளும் இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளாகி விடுவார்களோ? என்ற அச்சமும், கவலையும் அவர்களை வாட்டும்.

மாணவர்கள்
இந்தியாவின் எதிர்கால தூண்களாக உருவாக வேண்டியவர்கள், உருப்படாமல் போய்விடுவார்களோ? என்ற கவலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும்.மாணவ-மாணவியர் மது அருந்தி அநாகரிகமாக நடந்து கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு மாணவர்களை மட்டுமே குறை கூறிவிட முடியாது. இத்தகைய தவறுகளை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திய திரைப்பட காட்சிகளும், தெரு தோறும் மதுக்கடைகளை திறந்து வைத்த அரசும் தான் முதன்மைக் காரணமாகும்.

கல்வி நிறுவனங்கள்
பொது வெளியில் மது அருந்துவதும், காலியான மதுப்புட்டிகளை சாலைகளில் வீசி உடைப்பதையும் தான் சாகசங்கள் என்று திரைப்படங்கள் கற்பிக்கின்றன. வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நூலகங்களும், ஆலயங்களும் இருக்கின்றனவோ, இல்லையோ.... மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளை கடந்து தான் கிட்டத்தட்ட அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது.

மதுக்கடைகள்
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் நண்பகல் 12 மணிக்குத்தான் திறக்கப்படுகின்றன. 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தான் மது விற்பனை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிமொழி அளித்திருக்கிறது. ஆனால், காலையில் பள்ளிக் கூடத்திற்கு செல்லும் போதே, 17 வயது கூட நிரம்பாத மாணவச் செல்வங்களின் கைகளில் மதுப்புட்டிகள் எங்கிருந்து கிடைத்தன? இந்த வினாவுக்கு விடையளிக்காமல் அரசும், டாஸ்மாக் நிறுவனமும் எளிதாக கடந்து சென்று விட முடியாது.

மதுபானம்
முதலில் 4 வயது குழந்தைக்கும், பின்னர் 10 மாதக்குழந்தைக்கும் அவர்களின் உறவினர்களே மது கொடுத்து குடிக்கச் செய்த கொடூரங்களை தமிழகம் பார்த்தது, கோவை தனியார் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி போதையில் சாலையில் செல்பவர்களையும், பொதுமக்களையும், காவல்துறையினரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மயங்கி விழுந்ததையும் தமிழகம் பார்த்தது.

திமுக அரசு
திருச்செங்கோட்டில் மாணவர்கள் வகுப்பறைகளில் மது குடித்த அவலத்தையும் தமிழகம் பார்த்தது, கரூரிலும், மணப்பாறையிலும் மாணவர்கள் கடுமையான போதையில் சீருடையுடன் சாலையில் மயங்கி விழுந்து சுயநினைவின்றி கிடந்த கொடுமையை தமிழகம் பார்த்தது. அனைத்துக்கும் உச்சமாக பேருந்தில் மாணவிகள் மது குடிக்கும் சீரழிவை தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை.

தமிழக அரசு
மதுவை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் அரசை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் வரை தமிழகத்தில் இத்தகைய சீரழிவுகளை தவிர்க்க முடியாது. மதுவில் மூழ்கும் தமிழகத்தையும், எதிர்காலத் தலைமுறையினரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் உடனடியாக தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications