ஆர்.கே.நகரிலேயே அந்த போடு போட்டாரு.. அப்போ திருவாரூரில்?- ஷாக் கொடுக்க காத்திருக்கும் தினகரன்
சென்னை: திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலில் ஆர்.கே.நகர் பாணியில், திமுக, அதிமுகவிற்கு டிடிவி தினகரன் ஷாக் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததால் காலியாக உள்ள திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இதையடுத்து, திமுக மீண்டும் அந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுவதை போலவே, ஆர்.கே.நகரில், டிடிவி தினகரன் வெற்றி பெற்றது போல, இந்த தொகுதியிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரதான கட்சிகளுக்கு ஷாக் கொடுக்குமா என்று கேள்வியும் சேர்ந்து எழுகிறது.

சொந்த ஊர்
இதற்கு முக்கியமான ஒரு காரணம் தினகரனின் சொந்த ஊர் மன்னார்குடி, திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்டது என்பது தான். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக காட்டுத்தீ போல் செய்தி பரவிய நிலையில்கூட, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவரான தினகரன், ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது மிகப்பெரிய அரசியல் சாதனையாக பார்க்கப்படுகிறது. தமிழக பிரதான எதிர்கட்சியான திமுக அந்த தேர்தலில் டெப்பாசிட் கிடைக்கவில்லை.

ஈசியாக விடமாட்டார்
நிலைமை இப்படி இருக்கும்போது, தினகரன் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள தொகுதியை எளிதில் விட்டுவிடுவாரா என்ற கேள்வி பல தரப்பிலும் எழுகிறது. அவரது அரசியல் வியூகங்களுக்கு, ஸ்டாலின் தலைமையிலான திமுக பதிலடி கொடுக்க முடியுமா என்ற ஐயப்பாடு எழுகிறது.

தேர்தல் பணி
திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பாக, சில மாதங்களாகவே அந்த தொகுதியில் தினகரன் அணியினர் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவும் திமுகவுக்கு கிலியூட்டக் கூடிய தகவல்தான். இதுகுறித்து திருவாரூர் மாவட்டத்தில், வசிக்கக்கூடிய சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

திமுக கோட்டை
அவர்கள் கூறுகையில் "திருவாரூர் மாவட்டம் பொதுவாக திமுகவுக்கே பாரம்பரியமாக வாக்களித்து வந்துள்ளது. அதிலும் கருணாநிதி மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ள வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம் இது. கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கருணாநிதிதான். திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை என்றாலும், கருணாநிதிக்கு மக்கள் கொடுத்த அந்த ஆதரவை மறக்க முடியாது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கூட திமுகவுக்கே பாரம்பரியமாக வாக்குகளை அளித்து வருகிறார்கள். ஆர்கேநகர் போல எந்த ஒரு தந்திரத்திற்கும் திருவாரூர் மக்கள் மயங்க மாட்டார்கள் என்கிறார்கள். பார்க்கலாம்.. வரும் 31ம் தேதி தெரிந்துவிடும்.. ஜெயிக்கப்போவது தினகரனின் தேர்தல் வியூகமா அல்லது திமுகவிற்கு கிடைக்கப் போகிற பாரம்பரிய வாக்குகளா என்பது அல்லவா!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications