தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக தலைமையில் மாற்றமா? வந்து விழுந்த கேள்வி! உதயகுமார் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையிலா? என்று அங்கு மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று திமுக அமைச்சர் ரகுபதி கூறியதற்கு ஆர்பி உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அதிமுகவை மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து ஆர்பி உதயகுமார் பேசியதாவது:-

"ஒரு திருவிழா வரும் போது சாமியும் தேரில் சுற்றி வருவாங்க.. பஞ்சு மிட்டாய் விற்கிறவர்களும் சுற்றி வருவார்கள். அதேபோல் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் என எல்லா ஆட்டமும் அங்கே இருக்கும். இந்த ஆட்டம் எல்லாம் அங்கே பொழுதுபோக்கு தான். அங்கே வரும் மக்களுக்கு அங்கே இருக்கிற தெய்வம் தான் வாழவைக்கும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு தெய்வங்களான எம்ஜிஆர், ஜெயலலிதா. அவர்களின் மறுவடிவமான இன்று பிறந்தநாள் காணும் புரட்சி தமிழன் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொண்டு நான்கரை ஆண்டுகள் சிறப்பாக புனித அரசியலை செய்து வருகிறார். ஆகவே பொழுது போக்கிற்கு வந்தவர்களை பற்றி நாம் பேசி நம்ம பொழுதை வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்". இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து லோக்சபா தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக தலைமையில் மாற்றம் வரும் என்று அமைச்சர் ரகுபதி கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஆர் பி உதயகுமார், "அவரே அதிமுக தானே.." என்று சிரித்தபடி பதில் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைச்சர் ரகுபதி, அதிமுகவை கடுமையாக சாடினார். ரகுபதி கூறுகையில், "எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடுவது பற்றி கேட்கிறீர்கள். எதிர்க்கட்சி தலைவர் எதிர்கட்சி தலைவராக பணியாற்ற வேண்டும். அப்போது தான் சரியான எதிர்கட்சியாக இருக்கும். அதனை விட்டு வேறுவிதமான விமர்சனங்களை வைக்கும் போது அவரது பதவிக்கே ஒரு ஆபத்து ஏற்பட்டு விடும்.
ஆனால் அவரது பிறந்தநாளில் அவரது பதவிக்கு ஆபத்து என்று சொல்வது அழகல்ல. அவா் பல்லாண்டு வாழ திமுக வாழ்த்தும். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையிலா? என்று அங்கு மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனை நாங்கள் செய்யமாட்டோம். ஆனால் பாஜக செய்யும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
-
தவெக பக்கம் ஓடும் அதிமுக நிர்வாகிகள்.. 6 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு? -
அதிமுகவின் 4ஆம் தலைமுறையாகும் மிதுன்? ஓபிஎஸ் மேல தண்ணி பாட்டிலை வீசி.. அப்பவே ப்ளான் போட்ட எடப்பாடி? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன?










Click it and Unblock the Notifications