உலகில் 10 வருடத்தில் மொத்தமாக காலியாக போகும் தொழில்கள்! 2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்காது?
சென்னை: இன்னும் 10 வருடத்தில் எந்தத் தொழிலும் இருக்காது என்று கூறி ஆச்சர்யப்பட வைக்கிறார்கள் நெட்டிசன்கள்.. 2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும் என்பது குறித்தும், என்னென்ன தொழில்கள் இருக்காது ? என்பது குறித்தும் பட்டியல் போட்டு திகைக்க வைத்துள்ளார்கள். அதை பற்றி இப்போது பார்ப்போம்.
ஏஐ தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளால் இந்த உலகத்தில் பல தொழில்கள் காணாமல் போக போகிறது.. அடுத்த 10 வருடங்களில் பெரும்பாலான தொழில்கள் இருக்காது என்ற நிலை ஏற்பட போகிறது. வரும் 2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும், என்னென்ன தொழில்கள் இருக்காது என்பது பற்றியும், அடுத்த 10வருடத்தில் ஏற்பட போகும் தாக்கம் குறித்து ட்விட்டரில் சிந்தனை என்பவர் வெளியிட்ட பார்வேடு பதிவினை இப்போது பார்ப்போம்.

2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும்? என்னென்ன தொழில்கள் இருக்காது ?? நிலைமை இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம தான் நம்மள மாத்திக்கணும்... 1998 இல் தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்சத்து எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கைப் போடு போட்டது... இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்லை... வெள்ளை பேப்பர்ல பிரிண்ட் எடுத்து தான் போட்டோ பார்க்க முடியும் அது ஆனால் இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும் னு அவங்க நினைக்கவே இல்ல...
பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அது தான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்... தெருவுக்கு தெரு முளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு?? எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர், வாக்மேன், டிவிடி பிளேயர் என சொல்லிக் கொண்டே போகலாம்...
இன்னும் 10 வருடத்தில் எந்தத் தொழிலும் இருக்காது...
— சிந்தனை (@mdunis59) January 6, 2024
கூர்ந்து கவனித்துப் படியுங்கள்...
புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று...
தவறாமல் படியுங்கள்...
GOLDEN AGE COMING SOON ?
2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?
என்னென்ன தொழில்கள் இருக்காது ?? pic.twitter.com/9HHTJKQbM5
குண்டு பல்பும், டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்போ LED பல்பு தான்... எதனால ? ஏன் இப்படி னு கேட்டால்? டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. AI (அதாவது செயற்கை நுண்ணறிவியல்) சிம்பிளாக சொல்லனும்னா ' சாப்ட்வேர் என்கிற மென்பொருள்... மனித மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்...
உதாரணத்துக்கு சொல்லணும்னா.. சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வச்சிக்காமல், பாரத் மேட்ரிமோனி ('Bharat Matrimony') வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக் கொடுக்குது...கமிஷனோட... இல்லீங்களா..? இதேபோல் உபேர்'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வச்சிக்காமல், இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...
இந்த மாதிரி Software Tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களைப் பாதிக்கும் ? அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தைச் சொல்லலாம்... உங்களுக்கு ஒரு சட்டச் சிக்கல் வருது... என்ன பண்றது னு தெரியலை... என்ன செய்வீங்க? சிக்கலோட தீவிரத்தைப் பொறுத்தோ அவரோட பிரபலத்தைப் பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய பீஸ் வாங்குவாரு... இல்லையா...!
இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் டைப் பண்ணின உடனே, Section-னோட சரியான விவரங்களை Probabilities-டன் அந்தக் கம்ப்யூட்டர் கொடுத்தா? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலை ல துண்டைப் போட்டுக்கிட்டு தானே போகணும்... வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாகச் சொல்லும்... ஐபிஎம், வாட்சன் போன்ற நிறுவனங்கள் இப்போது அமெரிக்காவில் அதைத் தான் செஞ்சுகிட்டு இருக்கு.. ஒரு லாயரால் அதிகபட்சம் 70% தான் ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு சொல்ல முடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...
அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாமல் போய்டுவாங்க...
அட யாருமே வராத கடையில் இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம் தான்... ஆடிட்டர்கள் வேலையை Cleartax, Taxman போன்ற இணையத்தளம்... டாக்டர்கள் வேலையை Ada app!... ப்ரோக்கர்கள் வேலையை Magic Bricks, Quickr, 99acres, இணையத்தளம்..
உபேர், ஓலா வந்த பிறகு சொந்தக்கார் தேவையில்லை... ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணி வரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்... நெட்பிளிக்ஸ் வந்தப் பின் மேற்கத்திய நாடுகளில் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை...
இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS App மூலம் எடுத்துக் கொள்ளலாம்.
80% மேலான சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை...கம்ப்யூட்டரே பார்த்துக்கும்... 'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பிழைக்க முடியும்... 2025 இல் Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்... 2023 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது... அதோட ரிசல்ட் மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...
ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.
யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்க வேண்டிய தேவை இருக்காது... 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும்... பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு இடத்துக்குப் போகணும் னா... உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS.
அடுத்த இரண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானாக ஒரு கார் வந்து நிற்கும். நீங்க போக வேண்டிய இடத்துக்கு சமர்த்தாக கொண்டுப் போய் விட்டுடும்... கிலோமீட்டருக்கு இவ்வளோ னு நீங்க காசு கொடுத்தால் போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்...
இதனால என்னவாகும் என்றால்... அடிக்கடி தேவைப்படாமல் பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர் னு ஒருத்தரும் இருக்க மாட்டார்கள்.. சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம்... விபத்து' ரொம்ப குறைஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் கனரக வாகனங்களின் விற்பனை 90% கும் கீழே போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலைப் போகும்...
டெஸ்லா, ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களின் கட்டுபாட்டில் தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும்... எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம் தான். இப்போதே கூகுளுக்கு நீங்கள் எங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை, நீங்கள் எடுக்கும் முடிவுகளைத் தீர்மானம் செய்வது கூகுள் தான்...
எல்லாமே மின்சாரத்தில் தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியைக் கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10 -15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும்... இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்க னு நீங்க நினைச்சால்..?
உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்குப் பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வைக்கப் போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்...
குறிப்பாக சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்கபடுற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??
சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ? முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளைக் கேளுங்க... அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு...
அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்... ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும்... சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப் போய் பரவி வாழும் நிலை உருவாகும்... வீட்டுப் பக்கத்திலேயே Green House வைச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்... விவசாயம்.. இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனேஜர்களாக தான் இருக்கிறார்கள்...நம்ம ஊருக்கும் சீக்கிரமே இந்த நிலைமை வந்துடும்...
இன்னும் சொல்லப் போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும்... விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு மாத்திரை தான் உணவு.. காற்றுல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ...Moodies' ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை Scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது... 2027ல நீங்க பொய் சொல்றீங்களா, இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும்... யாராலயும் ஏமாத்த முடியாது...
இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளைச் செய்கிறது... இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012 ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க...
Tricoder - X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. உங்க செல்போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும்... உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சுக் காற்றை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிடும்... அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி... டாக்டர்கள் க்ளினிக் வைக்கத் தேவையில்லாமல், Online -ல யே ஒரு Op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத் தான் Hospital...
மாற்றம் ஒன்றே மாறாதது... மாற்றத்திற்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.. நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்குச் சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்...கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்தப் பத்தாண்டுகளில் நடக்கும்... சந்திக்கத் தயாராவோம். எதிர்காலம் நம் கையில் இல்லை.. கடந்தக் காலமும் நிகழ்காலமும், நம் கையிலா இருந்தது என்கிறீர்களா..." இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இதை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை.அதேநேரம் பதிவிட்டவர் இதை படித்தில் பிடித்து என்று கூறியுள்ளார். அதை தான் சிந்தனை என்பவர் மறுபதிவிட்டிருந்தார். இதில் எல்லாமே அப்படியே நடக்கும் என்று சொல்லிவிட முடியாது.. அதேநேரம் பல மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை...
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications