ஒரு வார்த்தை கூட சொல்லல! செந்தில் பாலாஜியை காப்பாற்ற போகும்.. நம்பர் 6.. இதுதான் ரொம்ப முக்கியம்!
சென்னை: நேற்று உயர் நீதிமன்றத்தில் நடந்த இடைக்கால ஜாமீன் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு 6 முக்கியமான வாதங்களை வைத்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி அல்லி முன் நேற்று முதல்நாள் நடந்த விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த மாதம் 28ம் தேதி வரை அதாவது 15 நாட்களுக்கு நீதிமன்ற காவல் உத்தரவு போடப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை இதற்கு எதிராக வழக்கு தொடுத்தது.
அமலாக்கத்துறை மனுவில், நீதிமன்ற காவலுக்கு பதிலாக எங்களுக்கு கஸ்டடி கொடுக்க வேண்டும்.,. அதாவது செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடியில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜி தரப்பு இடைக்கால ஜாமீன் கேட்டது. இந்த மனுவில் நேற்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் இளங்கோவன் வாதம் செய்தார். அவர் வைத்த வாதங்கள் பின்வருமாறு,
1. அமித்ஷா வந்த அடுத்த நாள் நடவடிக்கை எடுத்துள்ளனர், மத்திய உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்தபோது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை திட்டமிட்டு செய்துள்ளனர்
2. அடுத்த நாள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்க கூடாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனுவை நிராகரிக்க வேண்டும்;
3. ஏற்கனவே போதுமான விசாரணையை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை செய்துள்ளது. மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

4. செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும்; உயர்நீதிமன்ற அமர்வு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்துள்ளது; அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது, என்று வாதம் வைத்தனர்.
5. செந்தில் பாலாஜியை ஏன் கைது செய்கிறோம் என்று அவரிடமே சொல்லவில்லை.
6. இந்த கைதில் எந்த விதமான அடிப்படை விதிகளும் பின்பற்றப்படவில்லை.
அமலாக்கத்துறை வாதம்: இதற்கு எதிராக அமலாக்கத்துறை கடுமையான வாதங்களை வைத்தது. அதில் வைத்த வாதத்தில்,
1. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். உண்மையை கண்டறிய அமலாக்க பிரிவு காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம்.
2. அதனால் அவரை கஸ்டடி எடுக்க எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றனர்.
3. அவர் கஸ்டடி எடுக்கப்பட்டால்தான் பண பரிவர்த்தனை குறித்து நாங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
4. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கான மெமோவை வாங்க மறுத்தார்.ரிமாண்ட்டை நீக்க கோரிக்கை வைக்க முடியாது, ஜாமீன்தான் கேட்க முடியும்.
5. கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே மெமோவை வாங்க செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார்.
6. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது.
வீடியோ கால்: இந்த வழக்கில் செந்தில் பாலாஜி வீடியோ கால் மூலம் மருத்துவமனையில் இருந்து கலந்து கொண்டார். இதில் செந்தில் பாலாஜியிடம் வீடியோ வழியாக நீதிபதி அல்லி கேள்வி எழுப்பி வருகிறார். இதையடுத்து, அமலாக்கத்துறை மனு நகல் உங்களுக்கு அனுப்பப்பட்டதா என செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார்.
அமலாக்கத்துறை மனு நகல் இன்னும் கிடைக்கவில்ல, என்று செந்தில் பாலாஜி கூறினார்.












Click it and Unblock the Notifications