திருமாவளவன் ஏன் "இப்படி" திடீர்னு சொல்றாரு.. அறிவாலயத்தில் என்ன நடந்தது.. அப்படின்னா காங்கிரஸ்?
ஸ்டாலினிடம் திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை என்ன
சென்னை: மேயர் பதவிகளுக்கு கூட்டணி கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில், திமுக தரப்போ ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக உள்ளதாக கூறப்படுகிறது..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்..
நாளை மறுதினம் மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்... இதனால் தமிழக அரசியல் களமே பரபரப்பாக காணப்படுகிறது.

விசிக பிடிவாதம்
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கட்சியினருக்கும் பதவிகளை வழங்க வேண்டுமென்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதில் திருமாவளவன் ஆரம்பத்தில் இருந்தே பிடிவாதமாக இருந்து வருகிறார்.. சென்னை மேயர் மற்றும் 8 என்று முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே கோரிக்கை வைத்திருக்கிறார்...

திருமாவளவன்
இதைதவிர வெற்றி பெற்றவர்களின் பெயர் உட்பட அனைத்தையும் லிஸ்ட்டாகவே ஸ்டாலினிடம் தந்திருக்கிறார்.. திருமாவளவனை போலவே, காங்கிரஸ் கட்சியினரும் கன்னியாகுமரி, சிவகாசி இரண்டு மேயர் பதவிகளை எதிர்பார்க்கின்றனர்.. மேலும், ஆவடி அல்லது தாம்பரம், திருச்சி அல்லது கோவை ஆகிய மாநகராட்சிகளில், துணை மேயர் பதவியும் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளும் கேட்டு, காங்கிரஸ் தரப்பில் விருப்ப பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

வேண்டுகோள்
இப்படியே திமுக கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சியினரும் தங்கள் தரப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக கூட்டணி சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மாமன்ற உறுப்பினர் பதவி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடந்தது.. காங்கிரஸ் கட்சி, விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டு தங்களுக்கு வேண்டிய இடங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தனர்.

அறிவாலயம்
இதில், 21 மேயர் பதவிகளும் திமுகவுக்குத்தான் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டதாக தெரிகிறது.. இதற்கு பிறகுதான் திருமாவளவன் நோடியாகவே அறிவாலயத்துக்கு சென்றுள்ளார்.. திமுக குழுவினரை சந்தித்துப் பேசியிருக்கிறார்.. எஸ்.சி., பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், விகிகவுக்கு மேயர் பதவி தருமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது.. இதற்கு பிறகு திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

திமுக கோட்பாடுகள்
அப்போது, "விசிக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு சில பகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளோம்... திமுகவின் கோட்பாடுகளுக்கு இணங்க நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்க பெற்றுள்ளது... அதனால், விரைவில் முதல்வர் தலைமையில் அறிவிப்புகள் வெளியாகும்" என்றார்.. 21 மேயர் பதவிகளும் திமுகவுக்கே என்று அக்கட்சியினர் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், திருமாவளவனின் இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

படுகுஷியில் சிறுத்தைகள்
அதாவது, ஏற்கனவே திருமாவளவன் ஒரு மேயர் பதவி, 9 துணை மேயர் பதவிகள் கேட்டிருந்த நிலையில், அதில், மேயர் பதவியும் உறுதி செய்யப்பட்டுள்ளதா? அல்லது 9 துணை மேயர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதா? என தெரியவில்லை.. ஆனால் சிறுத்தைகள் படுகுஷியில் உள்ளனர். மற்ற கட்சிகளோ கலங்கி போய் உள்ளது.. எதுவானாலும் நாளைக்குள் தெரிந்துவிடும்..!
-
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications