சல்லி சல்லியாடுச்சு..அதிமுகவுக்கு கேட்டுச்சா? அப்படி சொன்னாரே ஜெயக்குமார்? உடைச்சிட்டாரு திருமாவளவன்
சென்னை: திமுக கூட்டணி இன்னும் உறுதியாகாத சூழலில், விசிக திருமாவளவன் தந்திருக்கும் பேட்டி ஒன்று மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.
கடந்த தேர்தலின்போது, 10 சீட்டுக்களை காங்கிரசுக்கு திமுக அள்ளி தந்திருந்த நிலையில், இந்த முறை வெறும் 8 சீட்டுக்கள் வரை மட்டுமே தர போவதாக தெரிகிறது.

எனினும், எப்படியாவது இரட்டை இலக்க சீட்டுக்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் உறுதியாக இருந்து வருவதாக தெரிகிறது.
விசிக திருமாவளவன்: அதேபோல, விசிகவை பொறுத்தவரை, கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. 2 தனித்தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டு வருவதாக தருகிறது.
கடந்த முறை 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. ஆனால்,2 தனித்தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டுமென விசிக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மதிமுக வைகோ: அதுபோலவே, மதிமுகவை பொறுத்தவரை, சின்னம் மிகப்பெரிய தொந்தரவாக வைகோவுக்கு ஏற்படுத்திவரும் நிலையில், சீட் எண்ணிக்கையிலும் அதிருப்தி நிலவுகிறது.. 1 சீட் மட்டுமே திமுக தர உள்ள நிலையில், மதிமுக அதை பெறுவதற்கு தயங்குவதாக தெரிகிறது.
இதனிடையே, மநீம தலைவர் கமல் கூட்டணியில் என்ட்ரி தந்துள்ளதால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சீட் விவகாரமும் முடியவில்லை. ஆக, காங்கிரஸ், விசிக, மதிமுக என எந்த கட்சியிலுமே இன்னும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. அனைவருமே தனித்தனியாக ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள்.
ஜெயக்குமார்: இப்படிப்பட்ட சூழலில்தான், "ரீ என்ட்ரி" தந்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "எங்களுக்கு பயந்தே திமுக தங்கள் கூட்டணியில் அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. கூட்டணி கட்சிகளை விட்டால் நேராக அதிமுகவுக்கு வந்துவிடுவார்கள் என்பதால்தான் இந்த அவசரம். கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும்?' என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பும், "திருமாவளவனுக்கு விருப்பம் இல்லாமல்தான் திமுகவில் இருக்கிறார். தமிழகத்தில் தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருந்து விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வெளியேறும்,, ஆனால் எங்கள் அணிக்கும் வருபவர்கள் வரத்தான் செய்வார்கள்... யாராலும் தடுக்க முடியாது. கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். திமுக இருக்கும் கட்சிகள் அதிமுக அணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது" என ஜெயக்குமார் கூறியிருந்தார்.
விசிக நிர்வாகி: இதற்கெல்லாம் சேர்த்து, இன்று திருமாவளவன் ஒரு பதிலளித்துள்ளார். விசிகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட உயர்நிலை செயல்திட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை அவசரகதியில் நடத்த வேண்டாம் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அப்போது, திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை அவசரகதியில் நடத்த வேண்டாம் என்று விசிக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டார்களாம்.
பதிலடி: பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "திமுக கூட்டணியில் தான் விசிக இருக்கிறோம். திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து பயணிப்போம்... அதில் எந்தவித ஊசலாட்டமும் இல்லை... திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஏதேனும் இடைவெளி ஏற்படும் என்று நினைத்து அதில் நுழையலாம் என யாரும் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.
திமுக கூட்டணியில் இடைவெளி வரும் என யாரும் இலவு காத்த கிளி போல் காத்திருக்க வேண்டாம். எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். இதில் எந்த மாற்றமும் கிடையாது"என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் திருமாவளவன்.
திருமாவளவன்: திருமாவின் இந்த பேச்சுக்கு அதிமுக என்ன பதிலடி தரப்போகிறது? முக்கியமாக ஜெயக்குமார் என்ன சொல்ல போறாரோ தெரியலையே?? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications