எம்ஜிஆர் செய்த அற்புதம்.. திமுகவை காலி பண்ண, அதிமுக, பாஜகவோடு கூட்டணி சேரும் "புள்ளி".. இது நடக்குமா
சென்னை: விரைவில் தமிழகத்தில் தேர்தல் வரஉள்ள நிலையில், அரசியல் கட்சிகள் துரிதமாகி வருகின்றன.. தற்போது அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணிக்கு வரலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கணிப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. இந்நிலையில், பாஜகவின் கூட்டணி பிளான் என்னவாக இருக்கும்? என்பது குறித்து பத்திரிகையாளர் பாண்டியன் தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Makkal Nirubar என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "பாஜக தமிழகத்தில் காலூன்றுவதற்கு அதிமுக தேவைப்படுகிறது.. காரணம், அதிமுகவின் வாக்கு வங்கி 35, 40 சதவீதம் உள்ளது.. படுதோல்வியை அதிமுக சந்தித்தபோதும்கூட, 20 சதவீதத்துக்கு கீழே அதிமுக செல்லவில்லை. ஆனால் பாஜகவுக்கு வெறும் 3 சதவீத வாக்கு வங்கி மட்டுமே உள்ளது..

எனவே, அதிமுகவின் துணையோடு தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது.. அண்ணாமலையால்கூட தனித்து நின்று எந்த வாக்கையும் பெற்றுவிட முடியவில்லை..
பாஜக மாஸ்டர் பிளான்
நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மட்டுமல்ல, தமிழிசை சவுந்தராஜன் போன்றோர் 20 ஆண்டு காலம் முயற்சித்தும், தனித்து ஒரு எம்எல்ஏவை கூட பெற முடியவில்லை.. எனவே, அதிமுகவுடன் கூட்டணி மட்டும், திமுகவை வர விடாமல் செய்யும் என்ற பார்முலாவை பாஜக கையில் எடுத்தது.. இதனை ஒன்றரை வருட காலம் எடப்பாடியும் தடுத்து வந்தார். .
விஜய்யை பொறுத்தவரை, அவரது முதல் எதிரி திமுக ஆகும்.. அதற்காக எடுத்ததே முதலமைச்சராக முடியாது.. அண்ணா முதலமைச்சராவதற்கு எம்ஜிஆர் தேவைப்பட்டார்.. முதலமைச்சராவதற்கு அண்ணாவுக்கு 18 வருடங்கள் தேவைப்பட்டது. 49ல் கட்சி ஆரம்பித்து 67-ல்தான் முதலமைச்சர் ஆனார். அப்போது அண்ணாவுக்காக சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார் எம்ஜிஆர்..
தவெக - அதிமுக - பாஜக கூட்டணி
பிறகு எம்ஜிஆர் 77-ல்தான் முதலமைச்சராக முடிந்தது.. அப்படியிருக்கும்போது விஜய், அண்ணாவைவிட பெரிய ஆளா? எம்ஜிஆரைவிட பெரிய ஆளா? கிடையாது. இது விஜய்க்கும் தெரியும்.. எனவே விஜய்யின் சாய்ஸ் அதிமுகவாகத்தான் இருக்க முடியும்.
அதிமுக மட்டுமே திமுகவை எதிர்க்கும் பலமான ஆயுதமாகும்.. இது விஜய்க்கும் தெரியும்,.. ஆனால், இந்த திட்டத்தை விஜய் அமல்படுத்த 6 மாதங்களாகும்.. எப்படியும் கண்டிப்பாக விஜய்யும் டெல்லிக்கு செல்வார்.. வேறு வழியேயில்லை.. பாஜக தயவில்தான் அதிமுக கூட்டணிக்குள் விஜய்யால் வர முடியும்..
100 சீட் தர மறுத்த எடப்பாடி
தங்களது கூட்டணிக்குள் விஜய் வருவதற்கு எடப்பாடி ஏற்கனவே பல முயற்சிகளை செய்தார். ஆனால் சீட் பேரம் சொதப்பிவிட்டது. திமுகவை எதிர்க்க 100 சீட் விஜய் கேட்டதால், அதற்கு அதிமுக தயாராக இல்லை.
ஒருமுறையாவது வாக்கு வங்கியை நிரூபித்தால்தானே விஜய் கேட்கும் சீட்டுகளை தர முடியும்? 20 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக விஜய் நிரூபித்தால் நிச்சயம் 100 சீட்டுகளை அதிமுக வழங்கும். ஏனென்றால் அதிமுகவிடம் இப்போதுவரை 25 சதவீத வாக்குவங்கி நிரந்தரமாக உள்ளது. இந்த 25 சதவீத வாக்கு வங்கியும், எம்ஜிஆரின் இரட்டை இலை செய்த அற்புதங்கள்.. ஆனால் விஜய்யின் வாக்கு வங்கி என்னவென்றே தெரியாத நிலையில் எப்படி 100 சீட் எடப்பாடி தருவார்?
விஜய் - எடப்பாடி - அமித்ஷா
திமுக ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தால்தான், தமிழ்நாட்டில் பாஜக வலுவாக முடியும்.. பாஜகவுக்கு எதிராக 5 மாநில முதல்வர்களை, தான் நினைத்த நேரத்தில் கூட்டிவிடுகிறார் ஸ்டாலின்.. பிறகு திடீரென பீகார் கூட்டத்துக்கு ஸ்டாலின் கிளம்பி போகிறார்.. இதையெல்லாம் தடுக்க வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும். அப்போதுதான், அகில இந்திய அளவில் பாஜகவுக்கு நெருக்கடி குறையும்..
எனவேதான், என்ன விலை கொடுத்தாவது விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் பாஜக கொண்டு வந்துவிடும்.. இந்த கூட்டணிதான் திமுகவுக்கு தோல்வி கூட்டணியாகவும் மாற வாய்ப்புள்ளது" என்று கணிப்புகளாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications