Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வச்ச குறி தப்பாது.. யாருக்கிட்ட?! முட்டி மோதிய தலைகளை ‘கூல்’ செய்து நினைத்ததை முடித்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2019 தேர்தல் வெற்றி ஃபார்முலாவையே மீண்டும் உறுதி செய்துள்ளது திமுக. விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் சீட் கேட்டு முட்டி மோதிய நிலையிலும் கடந்த தேர்தலைப் போன்றே அதே எண்ணிக்கையிலான சீட்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது திமுக. அதே தொகுதிகளையே மீண்டும் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழ்நாட்டில் முதல் கட்சியாக மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக தான். கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை வேகமாக நிறைவு செய்தது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு எவ்வளவு சீட் தேவை என்பதை திமுகவிடம் தெரிவித்தன. அதை நோட் செய்துகொண்டது திமுக தரப்பு.

Win win deal dmk follows same formula for 2024 lok sabha election

இவ்வளவுதான் முடியும்: அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு கட்சிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, தெளிவாகப் பேசி தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 சீட்களை கேட்ட நிலையில், கூட்டணியில் நிறைய கட்சிகள் உள்ளன. 1 தான் தர முடியும் எனக் கூறி ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கியது. அதே நாளில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியை ஒதுக்கியது. கொமதேக கட்சி உதயசூரியன் சின்னத்தில் நிற்பதையும் உறுதி செய்தது.

அதே தொகுதிகள்: இந்த இரண்டு கட்சிகளுக்கும் 2019 லோக்சபா தேர்தலைப் போலவே தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு கட்சிகளுமே தங்களுக்கு தலா 3 சீட்களை கேட்ட நிலையில், கடந்த முறை போலவே 2 என உறுதி செய்தது திமுக. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கவில்லை.

2019-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற தொகுதிகளையே 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேட்டன. ஆனால், மக்கள் நீதி மய்யம் கோவை தொகுதியைக் கேட்டதாலும், மதுரையில் திமுகவை நிறுத்த வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாலும், சிபிஐஎம், சிபிஐ இரு கட்சிகளுக்குமே எந்தெந்த தொகுதி என உறுதி அளிக்காமல், கடைசியாக தொகுதிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம் என ஒப்பந்தம் போட்டது திமுக.

3 கட்சிகளுடன் இழுபறி: இந்தக் கட்சிகளுக்கு எளிதாக தொகுதிப் பங்கீடு முடிவடைந்தாலும், விசிக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு அத்தனை எளிதாக நிறைவடையவில்லை. 2 தனித் தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத்தொகுதி என 3 தொகுதிகளை விசிக கேட்டு உறுதியாக நின்றது. 2 சீட்கள் தான், அதிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என நிபந்தனை விதித்தது திமுக. பேச்சுவார்த்தை இழுபறி நிலவி வந்த நிலையில், இறுதியாக 2 சீட்களுக்கு ஒப்புக்கொண்டது விசிக.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறும் வலியுறுத்தியது திமுக தரப்பு. உதயசூரியன் சின்னத்தில் அதிகளவிலான வேட்பாளர்கள் நின்று வென்றால், இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்து அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சியாக திமுக இருக்கும் என்பதை நோக்கியே, கூட்டணி கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது திமுக.

ஏற்றுக்கொண்ட விசிக: ஆனால், விசிக அதனை ஏற்கவில்லை. தங்கள் கட்சியை மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறுவதற்காக தனிச் சின்னத்தில் நிற்பது என்ற முடிவில் உறுதியாக இருந்தது. பேச்சுவார்த்தை முடிவில் சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) என கடந்த முறை விசிக போட்டியிட்ட தொகுதிகளையே மீண்டும் பெற்றுக்கொண்டது விசிக. 2 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் நிற்க விசிக முடிவு செய்துள்ளது.

Win win deal dmk follows same formula for 2024 lok sabha election

மதிமுகவை பொறுத்தவரை 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை மதிமுக கேட்டு வந்தது. ஆனால், திமுகவோ, 1 சீட் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் எனக் கூற வைகோவே அப்செட் ஆகிவிட்டார். தொடர்ந்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடித்த நிலையில், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் நிற்க ஒப்பந்தம் இறுதியானது. வைகோவுக்கு ராஜ்யப்சா சீட் மீண்டும் வழங்கப்படுமா என்பதை பற்றி பேச்சே இல்லை. ப்பந்தத்தை இறுதி செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், மனநிறைவோடு இருப்பதாக தெரிவித்தார்.

கமல்ஹாசனுடன் டீல்: மற்ற கட்சிகள் அனைத்திற்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்த நிலையில் மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே மிச்சம் இருந்தன. மக்கள் நீதி மய்யம் 2 சீட்கள் கேட்டு வந்தது. அதுவும் தங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் உறுதியாக இருந்தார். உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு அழுத்தம் கொடுத்து வந்தது திமுக.

இறுதியாக திமுக கூட்டணியில் இணைந்துள்ள மநீமவுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்கள் நீதி மய்யம், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும், மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதலில் தொடங்கி கடைசியில் காங்கிரஸ்: லோக்சபா தேர்தல் தொடர்பாக, திமுக கூட்டணியுடன் முதன் முதலில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. காங்கிரஸ் கட்சி 12 சீட்களை கேட்டு வந்தது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் பலத்திற்கு தகுந்தபடி அதிக சீட் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரி வந்தது. அதற்கு திமுக பிடிகொடுக்கவில்லை.

இதையடுத்து, 2019 மக்களவைத் தேர்தலைப் போன்று தற்போதும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து 10 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. இதற்கு, திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் இழுபறி நீடித்தது. இந்நிலையில், டெல்லி மேலிடத்தில் இருந்தும் திமுகவுக்கு நேரடியாகவே பேசப்பட்டுள்ளது. இதையடுத்து, 10 சீட்டுக்கு ஒப்புக்கொண்டார் ஸ்டாலின்.

டபுள் டிஜிட்டை உறுதி செய்த காங்கிரஸ் : இதையடுத்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், அஜோய் குமார் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து திமுக தலைவருடன் பேசி, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்தனர்.

2019 மக்களவைத் தேர்தல் போன்று தற்போதும் தமிழ்நாட்டில் 9, புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டபுள் டிஜிட் என்பதில் உறுதியாக நின்று சாதித்துள்ளது காங்கிரஸ் கட்சி. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதால் அட்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது.

ஒரு தொகுதி கூடுதலாக: தமிழ்நாட்டில் இந்த முறை திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுச்சேரியும் சேர்த்து 40 தொகுதிகளில் திமுக நேரடியாக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக தலா 2 தொகுதிகளிலும், மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், ஐஜேகே தலா 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

ஆக, கடந்த 2019 போலவே காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் அதே அளவிலான சீட்களை கொடுத்துள்ளது திமுக. விசிக, மதிமுக கட்சிகள் முட்டி மோதிய நிலையிலும், திமுக உறுதியாக நின்று தொகுதிப் பங்கீட்டை தங்களுக்கு சாதகமாக நிறைவு செய்துள்ளது. கடந்த முறை ஐஜேகே போட்டியிட்ட 1 தொகுதி இப்போது திமுக நேரடியாக போட்டியிட கூடுதலாக கிடைத்துள்ளது.

Win win deal dmk follows same formula for 2024 lok sabha election

கடந்த 2019ல் திமுக கூட்டணியில் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள்:

காங்கிரஸ் கட்சி

கன்னியாகுமரி
சிவகங்கை
விருதுநகர்
கிருஷ்ணகிரி
ஆரணி
கரூர்
திருச்சி
தேனி
திருவள்ளூர்
புதுச்சேரி

விசிக

சிதம்பரம்
விழுப்புரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

ராமநாதபுரம்

கொமதேக

நாமக்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திருப்பூர்
நாகப்பட்டினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மதுரை
கோயம்புத்தூர்

மதிமுக

ஈரோடு

இந்த முறை, இதுவரை 3 கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 3 கட்சிகளுக்குமே கடந்த முறை போட்டியிட்ட அதே சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, மற்ற கட்சிகளும் அதே 2019 ஃபார்முலா படி தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+