Coolie: கூலி ரிலீஸாகியிருக்கு! சென்னையில் இல்லாம ரஜினிகாந்த் அங்க ஏன் போனாரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கூலி திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் எங்கு சென்றுள்ளார் என்பதை பாருங்க! வழக்கமாக படம் முடிந்ததும் இமயமலைக்குத்தான் செல்வார். ஆனால் அங்கு ஏன் சென்றார்?

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவான படம் கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

coolie rajinikanth

இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. கர்நாடகம், ஆந்திரா, கேரளாவில் காலை வெளியாகியுள்ளது. இது ரஜினியின் 171 ஆவது படமாகும். ஜெயிலர் படத்தில் கூட மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகம் உள்ளிட்டோருடன் ரஜினி நடித்திருந்தார்.

அது போல் கூலி படத்திலும் பல்வேறு ஸ்டார்களுடன் அவர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. முதல் பாதி ஸ்லோவாக செல்வதால் சுமாராக இருப்பதாகவும் பிற்பாதி விறுவிறுப்பாகவும் செல்வதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென நேற்று பெங்களூர் சென்றார். வெள்ளை நிற குர்தா, வேட்டி அணிந்து கொண்டு மிகவும் எளிமையாக பசவனகுடியில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கு சென்றார். அவரை ஆசிரம நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மடத்தில் சாமி தரிசனம் செய்தார். அத்துடன் சிறிது நேரம் தியானம் செய்தார். ரஜினி வந்திருப்பது குறித்து தகவலறிந்த பலர் அங்கு கூடினர். ரஜினியுடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பொதுவாக படம் முடிந்ததும் இமயமலைக்கு செல்வது ரஜினியின் வழக்கம். அண்மைக்காலமாக சில நேரங்களில் வெளிநாடுகளுக்குச் செல்கிறார். தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என தெரிகிறது. இந்த நிலையில் பெங்களூர் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் படம் ரிலீஸ் தேதி அன்று ரஜினி ஊரில் இருக்க மாட்டார். ரோகிணி தியேட்டரில் லதா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் படத்தை பார்த்து ரஜினிக்கு feedback கொடுப்பர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+