துரைமுருகன் இடத்தில் அன்பில் மகேஷ்.. முதல்வர் சீட்டுக்கு அடுத்த இருக்கையில்.. உதயநிதிக்கு அருகில்!
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காத மூத்த அமைச்சர் துரைமுருகன் இருக்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமர்ந்துள்ளார். சீனியாரிட்டி அடிப்படையில் சட்டசபையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அருகில் முன் வரிசையில் அமர்ந்துள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தமிழக சட்டசபையில் கடந்த 17 ஆம் தேதி 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து, 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை ஆற்றினார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அமைச்சர்களின் பதிலுரையை புறக்கணித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் யாரும் அவைக்கு வரவில்லை.
இந்நிலையில் சட்டசபையில் இன்று மூத்த அமைச்சர் துரைமுருகன் இருக்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமர்ந்துள்ளார். சீனியாரிட்டி அடிப்படையில் சட்டசபையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அருகில் முன் வரிசையில் அமர்ந்திருந்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
உடல் நலக்குறைவு காரணமாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பங்கேற்காத நிலையில், அவர் இருக்கையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அமர்ந்திருந்தார். அவை முன்னவர் எனும் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு அடுத்த இருக்கை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் காலியாக இருந்த அந்த இருக்கையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்தார்.












Click it and Unblock the Notifications