சூப்பர் நியூஸ் சொன்ன எடப்பாடியார்.. இன்னும் 3 நாட்கள்தான்.. கொரோனா சுத்தமாக காலி
சென்னை: இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள், தமிழகத்தில் புதிதாக கொரோனா வைரஸ் நோயாளிகள் இல்லாத நிலை உருவாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.
Recommended Video
சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறியதாவது: விவசாய உற்பத்தி வீணாகாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் உரிய முறையில் கிடைக்கவும், அரசு காய்கறிகளை சப்ளை செய்யும் பணிகளை கையில் எடுத்துள்ளது.
மத்திய அரசு சிவப்பு மண்டலம், பச்சை மண்டலம் என்ற மாவட்டங்களை அறிவித்துள்ளது. பச்சை மண்டலம் என்றால் அந்த மாவட்டத்தில் ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பும் கூட இல்லை என்று அர்த்தம். சிவப்பு மண்டலப் பகுதியில் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.

கருவி
ரேப்பிட் டெஸ்ட் கருவி வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது. அதற்கான தொகை செலுத்தப்பட்டுள்ளது. நமக்கு வர வேண்டியது, வேறு நாட்டுக்குப் போய் விட்டது. இருந்தாலும் தொடர்ந்து நமது அரசு எந்த நாட்டில் ஆர்டர் கொடுத்தோமோ, அந்த நாட்டில் இருந்து கொள்முதல் செய்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

ஒரு மாநிலத்திற்கும் வரவில்லை
மத்திய அரசும் அதே நாட்டில் தான் ஆர்டர் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கும், இந்த கருவி இன்னும் வரவில்லை.
தமிழகம் இரண்டாவது ஸ்டேஜில் நிலையில்தான் உள்ளது. தற்போது நோயின் தாக்கம் குறைந்துள்ளது. நேற்றைய தினம், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 38 என்ற அளவில் இருந்தது. இப்போது அது இன்னும் குறைந்துள்ளது. 25 நோயாளிகள் என்ற அளவிற்கு வந்துள்ளது.

நோயாளி எண்ணிக்கை குறைவு
இன்னும், இரண்டு, மூன்று நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும். ஏற்கனவே நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்த பரிசோதனை நடவடிக்கை காரணமாக, நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள், நோயாளிகள் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவுக்கு குறைந்து விடும், என்று எண்ணுகிறோம்.

டிஸ்சார்ஜ்
இதுவரை 150 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே, அடுத்த சில நாட்களில் அனைத்து நோயாளிகளும் நெகட்டிவ் என்ற நிலைக்கு மாற்றப்படுவார்கள். அதை நாம் பார்த்து மகிழப்போகிறோம். இவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தீவிர ஏற்பாடு
முன்னதாக, சென்னையில், தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்டங்களில் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்ட வாரியாக செய்து வரும் பணிகள், எடுக்கப்பட வேண்டிய பணிகள், குறித்தும் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications