ஆசை ஆசையாக போண்டா வாங்கி சாப்பிட்ட பெண்.. தொண்டையில் சிக்கி.. பரிதாப மரணம்!
போண்டா தொண்டையில் சிக்கி பெண் உயிரிழந்தார்
Recommended Video
சென்னை: இந்த கொடுமையை எங்க போயி சொல்றது... ஆசை ஆசையாக போண்டா சாப்பிட்ட பெண்.. வாயில் போண்டாவுடனேயே பரலோகம் போய் சேர்ந்து விட்ட கொடுமை நடந்துள்ளது!
சென்னை சூளைமேட்டில் வகித்து வருபவர் கங்காதரன். இவர் ராயப்பேட்டையில் உள்ள டூவீலர் வாகன உதிரி பாகங்கள் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.. இவருடைய மனைவி பத்மாவதி. இவருக்கு வயது 45 ஆகிறது!
இவர்களுக்கு கல்யாணமாகி 11 வருஷங்கள் ஆகிறது.. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.. பத்மாவதி தனது கணவருடன் அம்மா வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பத்மாவதியின் தன் அம்மாவிடம் போண்டா சாப்பிடணும் ஆசையா இருக்கு என்று கேட்டுள்ளார்.. உடனே அவரது அம்மாவும் மகளுக்காக கடைக்கு சென்று போண்டா வாங்கி வந்து தந்திருக்கிறார்.
அதை பத்மாவதி வாங்கி அவசர அவசரமாக சாப்பிட்டார்.. சாப்பிட்ட வேகத்திலேயே அந்த போண்டா தொண்டையில் சிக்கி கொண்டது.. இதனால் அவரது அம்மா ஓடிச்சென்று தண்ணீர் கொண்டு வந்து வாயில் ஊற்றினார்.. ஆனால் தண்ணீரும் வாய்க்குள் இறங்கவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் பத்மாவதிக்கு மூச்சு திணறல் ஏற்படவும் பதறி போய்விட்டார்.. பக்கத்து வீட்டினர் உதவியுடன் உடனடியாக ஆம்புலஸ்க்கு தகவல் தெரிவித்து, மயங்கிய நிலையில் கிடந்த மகளை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்கள்.. இதை கேட்டு பத்மாவதியின் அம்மா கதறி அழுதார்.. போண்டா சாப்பிடும்போதே ஒரு பெண் இப்படி அநியாயமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை மட்டுமில்லாமல், கடுமையான அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதனால்தான், மாவு பொருட்களை சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துவார்கள்!
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications