"விஷம் கொடுத்தும் என் புருஷன் சாகலையே.. என்ன பண்ணலாம்".. கள்ளக்காதலனிடம் ஐடியா கேட்ட மனைவி!

கணவனை விஷம் தந்தும், துப்பட்டாவால் இறுக்கியும் கொன்றுவிட்டார் ஒரு பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷம் கொடுத்துகூட என் புருஷன் சாகலையே அடுத்து என்ன செய்யலாம் என்று, தாலி கட்டிய மனைவி, கள்ளக்காதலனிடம் ஐடியா கேட்டார்.. அதற்கு பிறகு கணவனை துடிதுடிக்க கொன்றுவிட்டார்.. இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் தரணிதரன்... இவர் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். பவானி என்ற மனைவி உள்ளார்.. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தரணிதரன் கடந்த 22 -ம் தேதி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் அளித்தார்.. இதையடுத்து, அவரது உடலை போலீசார் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.

தரணிதரன்

தரணிதரன்

ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், தரணிதரன் கழுத்து இறுக்கப்பட்டு, அதனாலேயே அவர் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து முதல் விசாரணையே பவானிதான்.. மாறி மாறி உளறி பதில் சொன்னார்.. பிறகு அவரது செல்போனை தடாலடியாக பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

 தினேஷ்

தினேஷ்

அப்போதுதான் அந்த கள்ளக்காதலன் சிக்கினார்.. எப்ப பார்த்தாலும் அவருடன் பேசி கொண்டே இருந்திருக்கிறார் பவானி.. அந்த கள்ளக்காதலன் பெயர் தினேஷ்.. பூந்தமல்லியை சேர்ந்தவர்.. இவரும் டிரைவர்தானாம்.. தரணிதரனுக்கு நண்பர்.. அடிக்கடி வீட்டுக்கு வந்து போக இருக்கவும் பவானியுடன் லவ் வந்துவிட்டது.

தொந்தரவு

தொந்தரவு

ஒருகட்டத்தில் தரணிதரன் இந்த கள்ளக்காதலனுக்கு தொந்தரவாக இருக்கவும் கொலை செய்ய முடிவு செய்தனர்.. கடையில் இருந்து பூச்சி மருந்தை வாங்கி வந்து சாப்பாட்டில் கலந்து தரும்படி தினேஷ் ஐடியா தந்தார்.. அதன்படி, இதற்காக கடந்த 21-ம் தேதி கடைக்கு போய் விஷம் வாங்கி வந்து சாப்பாட்டில் கலந்து தந்தார் பவானி... அதை சாப்பிட்டுவிட்டு தரணிதரனும் தூங்கிவிட்டார்.. ஆனால் சாகவில்லை.

விஷம்

விஷம்

மறுநாள் எழுந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.. இதை பார்த்து டென்ஷன் ஆன பவானி, திரும்பவும் தினேஷுக்கு போன் செய்து, விஷம் தந்தும் சாகலையே என்றார்.. அப்படின்னா கழுத்தை நெரித்து கொன்னுட வேண்டியதுதான் என்று தினேஷ் 2வது ஐடியா தந்துள்ளார். அதனால் உடம்பு சரியில்லாமல் தூங்கி கொண்டிருந்த தரணிதரனை தன்னுடைய துப்பட்டாவால் இறுக்கி 2 பேரும் சேர்ந்து கொன்றுவிட்டனர்...

 தொடர்பு

தொடர்பு

பவானி கண்முன்னாலேயே தரணிதரன் துடிதுடித்து இறந்து போயுள்ளார். இவ்வளவும் பவானி தன் கள்ளக்காதலனுக்காக செய்தார் என்று நினைத்தால் அதுதான் இல்லை.. பவானிக்கு அதே ஏரியாவில் இன்னொருத்தருடன் தொடர்பு இருந்துள்ளது.. இதையும் நம் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.. அதனால் பவானியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+