நைட்டியுடன் பானு.. 'சிஸருடன்' இரண்டாவது கணவர் கார்த்தி.. தலைமுடியை பிடித்து.. கொடுமை!
சென்னை: பெண்ணின் கைகளை பின்னால் கட்டி தலை முடியை அறுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண் வேண்டாம் வேண்டாம் என கதறியும் இது போன்றதொரு கொடுமை நடந்துள்ளது.
நைட்டி அணிந்தபடி தரையில் அமர்ந்திருக்கும் பெண்ணின் இரு கைகளும் பின்னால் டவலால் கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டிற்குள் ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்கள் இருக்கும் நிலையில் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் பெண்ணை ஒரு நபர் எட்டி உதைக்கிறார்.
பின்னர் அந்த நபர் கத்தரிக்கோலை கொண்டு வந்து அந்த பெண்ணின் தலை முடியை அறுக்கும் செயலில் ஈடுபடுவதும் கத்தரிக்கோல் சரியாக அறுக்காததால் அரிவாள்மனையை கொண்டு வந்து அந்த பெண்ணின் தலைமுடியை பேசியபடி அறுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முடி அறுக்கும் நபர்
மேலும் முடியை அறுத்த நபர் கார்த்தி என்றும் முடி அறுக்கப்பட்ட பெண் பானு என்றும் தெரியவந்தது. மேலும் கார்த்திக்கிற்கு பானு இரண்டாவது மனைவி என்பதும், பானுவிற்கு கார்த்தி இரண்டாவது கணவர் என தெரியவந்துள்ளது. கஞ்சா பழக்கம் உடைய கார்த்தி பானுவை அடித்து சித்ரவதை செய்ததால் இவருடன் வாழ பிடிக்காமல் வெளியே சென்று விட்டாராம் பானு.

தேடி பிடித்த கார்த்திக்
இதையடுத்து பானுவை தேடிப் பிடித்து அழைத்து வந்து கைகளை கட்டி கொடுமைப்படுத்திய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவியது. சில மாதங்களாக வடபழனியில் தங்கியிருந்த இவர்கள் தற்போது அங்கிருந்து காலி செய்து விட்டு வேறு ஒரு வீட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

எங்கே என தெரியவில்லை
ஆனால் எந்த பகுதியில் தங்கி உள்ளார்கள் என்பது தெரியவில்லை இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் அந்த பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் அந்த பெண்ணை ஆபாசமான வார்த்தைகளால் கார்த்திக் பேசுகிறார்.

வாழ்க்கை பறிபோனது
அந்த பெண்ணின் செல்போன் லாக்கை கேட்டும் அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் உன்னால் எத்தனை பேரது வாழ்க்கை கெட்டு போயுள்ளது என கேட்டுக் கொண்டே முடியை அறுக்கிறார் கார்த்திக். சுற்றியிருப்பவர்கள் வேண்டாம் என தடுத்தும் அவர் கேட்பதாக தெரியவில்லை. என்னதான் அந்த பெண் தவறான வழியில் சென்றாலும் தண்டனை கொடுக்க இவர் யார் என்ற கேள்வி எழுகிறது. அதிலும் சுற்றியிருப்பவர்கள் யாரும் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பது அபத்தம். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் கார்த்திக் மீது அந்த சம்பவத்தை சுற்றி நின்று பார்ப்பவர்கள் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications