அலறிய சென்னை.. சைதாபேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணை வெட்டிய மர்ம நபர்! ரத்த வெள்ளத்தில் மீட்பு
சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வந்த ராஜேஸ்வரி எப்ன்ற பெண்ணை மர்ம நபர் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையின் மிகவும் பரபரப்பான ரயில்நிலையங்களுல் ஒன்று சைதாப்பேட்டை. நாளொன்று பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் இந்த ரயில் நிலையத்தில் அதிர வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருபவர் ராஜேஸ்வரி.

இவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து கீழே இறங்கி வந்து இருக்கிறார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் ராஜேஸ்வரி அருகே கத்தியுடன் சென்று உள்ளார். கண் இமைக்கும் நேரத்திற்கு ராஜேஸ்வரியை கத்தியால் வெட்டிய அந்த நபர் உடனே அங்கு வந்த ரயிலில் ஏறி தப்பிச் சென்று உள்ளார்.
இதனால் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஸ்வரி மீட்கப்பட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து உள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து தப்பிச் சென்ற குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி இருக்கிறார். கத்தியால் குத்திவிட்டு தப்பிய மர்ம நபர் யார்? ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? முன்விரோதம் காரணமாக வெட்டினாரா? கொலை செய்யும் முயற்சியில் தாக்குதல் நடத்தினாரா? என்ற கேள்விகளுடன் போலீசார் விசாரணையில் இறங்கி இருக்கிறார்.

சென்னையின் முக்கிய பகுதியான சைதாப்பேட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இதேபோல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அதேபோல் கடந்த ஆண்டு பெண் ஒருவர் பரங்கி மலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னையில் இன்று மற்றுமொரு முக்கிய ரயில் நிலையமான சைதாப்பேட்டையில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications