Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1000 கிடைக்காதவர்கள்.. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? வெளியான அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள பெண்கள் முறையான ஆவணங்களுடன் வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதிவாய்ந்த பெண்களை சேர்க்கும் வகையில் 9000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

Women Excluded from Magalir Urimai Thogai Can Reapply from June 4 Says Minister Geetha Jeevan

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது சுமார் 1 கோடியே 34 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 9000 கோரிக்கை முகாம்கள் நடைபெறும் எனவும், அப்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக தகுதியுள்ள மகளிர் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைய ஜூன் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான படிவங்கள் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேராக மாநகராட்சி அலுவலகம் அல்லது உள்ளாட்சி அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்யலாம். ஆனால் ஏற்கனவே விண்ணபித்து நிராகரிக்கப்பட்டவர்கள் நேராக மாநகராட்சி அல்லது உள்ளாட்சி அலுவலகங்களில் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டியிருக்கும்.

நேற்று கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியாவே திரும்பி பார்க்கக்கூடிய திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதாவது கலைஞர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டுப் போயிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால், நிச்சயமாக விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினார். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் ஜூலை மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார். எனவே இன்னும் அதிகமான மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+