கஞ்சா அடிச்சிட்டு எங்க போனீங்க? மாதர் சங்கத்தை சீண்டிய சீமான் மீது வரதட்சணை புகார்! சீறிய பெண்கள்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வரதட்சணை புகார் கொடுக்கப் போவதாக மாதர் சங்கத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது குறித்து ஆணையர் அலுவலகத்திலும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த 27 வயது ரிதன்யா என்ற பெண், வரதட்சணைக் கொடுமையாலும் கணவரின் உடல்ரீதியிலான தொல்லையாலும் கடந்த மாதம் 28ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தில் தான் ஏன் தற்கொலை முடிவை எடுத்தேன் என்பதற்கான 3 ஆடியோக்கள் கல் நெஞ்சையும் கரைக்கும் வகையில் கண்ணீரை வரவழைத்தன.
ரிதன்யாவின் கணவர் கைது
இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த வழக்கில் ரிதன்யாவுக்கு நீதி கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் குமுறி வருகிறார்கள்.
மாதர் சங்கம்
இந்த நிலையில், ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானிடம் ரிதன்யா விவகாரம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர், "இந்தத் தற்கொலைக்கு எந்தப் பெண்கள் அமைப்பும், மாதர் சங்கத்தினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. எனக்கு எதிராகப் போராடிய மகளிர் அமைப்புகள், மாதர் சங்கங்கள், முற்போக்குவாதிகள், எழுத்தாளர்கள் எல்லாம் ரிதன்யா விவகாரத்தில் குரல் கொடுக்காதது ஏன்? குறைந்தபட்சம் இந்த பிரச்சனைக்குக் கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. இந்த பிரச்சனைக்குக் குரல் கொடுக்காமல் எங்கே போய்ப் படுத்துக் கிடக்கிறார்கள்? கஞ்சா, கொகைன் சாப்பிட்டுக் கிடக்கார்களா அல்லது டாஸ்மாக் கடையில் மது குடித்துக் கிடக்கார்களா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
சீமான் மீது புகார்
இந்த நிலையில், நேற்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினரும், பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வந்து தங்களை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி சீமான் மீது புகார் அளித்தனர்.
சீமானுக்கு எதிராக போராட்டம்
பின்னர் சீமானின் புகைப்படத்தை காலில் போட்டு மிதித்தும், கிழித்தெறிந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து மாதர் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தற்போது சீமான் மீதுதான் வரதட்சணை புகார் கொடுக்க வேண்டும். அதாவது ஒரு பேட்டியில் அவர் கூறியது என்னவெனில், 'எனது மாமியாரிடம் 85 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதை என்னிடம் கொடுங்கள், பயிர் வைத்து சாகுபடி செய்வதாகச் சொன்னேன். என் மனைவி 'கேட்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் கேளுங்கள்' எனச் சொல்லிவிட்டார். நானாகப் போய் என் மாமியாரிடம் கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் மனைவியே அதைக் கேட்டு வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்' எனச் சொல்லியிருக்கிறார். வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்பதைப்போல், வரதட்சிணை கேட்பதும் தவறுதான். இவர் மனைவியை விட்டு அவரது தாய் வீட்டில் 85 ஏக்கர் நிலத்தைக் கேட்கச் சொல்வதும் குற்றம்தானே?" என்றனர்.
85 ஏக்கர் நிலம்
அவர் 85 ஏக்கர் குறித்து பேசிய காணொளியையும், பெண்கள் குறித்துத் தவறாகப் பேசிய காணொளியையும் இணைத்து ஆணையரிடம் புகார் கொடுக்கிறோம் என மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து சீமானுக்கு எதிராகக் கோஷங்களும் எழுப்பப்பட்டன.
-
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications