இதுதாங்க லிஸ்ட்.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.. இன்று பெண்களுக்கு செல்லும் முக்கிய மெசேஜ்!
சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்று பெண்களுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்று இன்று அனுப்பப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 1.06 கோடி பயனாளிகள் இதில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 1.70 கோடி பேர் விண்ணப்பம் செய்த நிலையில் அதிகபட்சம் 1.06 கோடி பேருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான exclusive ஏடிஎம் கார்டு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைக் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த வங்கி கணக்கு வழியாக புதிய பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 திட்டத்திற்கு தேர்வாகியும் பணம் வரவில்லை என்றால் என்ன செய்வது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. இதற்கு நீங்கள் மீண்டும் முகாம்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீடு மூலம் வங்கி கணக்குகளை மாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்று பெண்களுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்று இன்று அனுப்பப்பட உள்ளது. அதன்படி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 70 லட்சம் பேருக்கு இன்று அதற்கான காரணங்கள் மெசேஜாக அனுப்பப்படும். நேரடியாக அவர்களின் போனிற்கு இது மெசேஜாக அனுப்பப்படும்.
அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? அவர்களின் விண்ணப்பம் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது தொடர்பான விவரங்கள் மெசேஜாக அனுப்பப்படும். அதை பார்த்து காரணம் போதுமானதாக இல்லை என்றால் பெண்கள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
எப்படி மாற்றுவது?: தவறான வங்கி கணக்கை முகாம் மூலம் மட்டுமே மாற்ற முடியும். இந்த முகாம்கள் எப்படி நடக்கும் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தல் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில், குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதல் கட்டமாகவும், 05.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாவது கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும், விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கோடி மகளிர் பயனாளிகளாகத் மேல்முறையீடு கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications