"தைரியமே துணை" மிதாலி ராஜ் டூ மேரி கோம் வரை.. உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய பெண்கள்!
சென்னை: உலகம் முழுவதும் நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக உடல் உழைப்பிற்கு பெண்களை எடுத்துக்காட்டாக சொல்ல மாட்டார்கள். ஆனால் அதிக உடல் உழைப்பை கோரும் விளையாட்டுகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனைகள் குறித்தும், அவர்களின் சாதனைகள் குறித்தும் பார்க்கலாம்.
சானியா மிர்சா
கடந்த 20 ஆண்டுகளாக இந்திய மகளிர் டென்னிஸின் முகமாக இருந்தவர் சானியா மிர்சா. இதுவரை இரட்டையர் பிரிவில் 43 டபிள்யூடிஏ கோப்பைகள், ஒற்றையர் பிரிவில் ஒரு கோப்பை, 6 கிராண்ட்ஸ்லாம் என்று சாதனைகளுக்கு மேல் சாதனைகளை படைத்துள்ளார். இந்திய டென்னிஸ் வரலாற்றில் டபிள்யூடிஏ தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் பிடித்த பெண் சானியா மிர்சா தான். அண்மையில் ஓய்வு பெற்றாலும், இப்போதும் அடுத்தக் கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அபர்ணா போபட்
1997 முதல் 2006 வரை இந்திய மகளிர் பேட்மிண்டன் விளையாட்டி 9 முறை தேசிய சாம்பியனாக வலம் வந்தனர். 2 முறை ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், பதக்கத்திற்கு அருகில் சென்று தோல்வியை கண்டவர். அதேபோல் ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்றவர்,. பேட்மிண்டன் தரவரிசையில் 16வது இடத்திற்கு முனேறிய முதல் பெண் இவர்தான். சாய்னா நேவால் மற்றும் பிவி சிந்து ஆகியோர் இவர் போட்ட கோட்டில் பயணித்தவர்கள் என்பது பேட்மிண்டனை கவனித்து வந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மிதாலி ராஜ்
சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் இந்திய அணிக்கு அறிமுக்னார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் மிதாலி ராஜ் 14 வயதிலேயே இந்திய அணி முகாமிற்குள் கால் பதித்தவர். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்க்ஹிக்கம் செலுத்திய மிதாலி ராஜ், இதுவரை செய்துள்ள சாதனை பட்டியலை மட்டும் தனியாக எழுதலாம். கேப்டனாக, பேட்ஸ்மேனாக, மாடலாக, விளம்பர தூதராக என்று மிதாலி ராஜ் களத்திலும் களத்திற்கு வெளியிலும் இன்று வரை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

தீபா மாலிக்
பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா சார்பாக பதக்கம் வென்ற முதல் பெண் தீபா மாலிக். 2016 ரியோ பாராலிம்பிக்ஸில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தார். குண்டு எறிதல் மட்டுமல்லாமல் ஆசிய பாரா கேம்ஸில் 3 பதக்கங்களை தொடர்ந்து வென்ற ஒரே இந்திய பெண் தீபா மாலிக் தான். தடகளம் மட்டுமல்லாமல் மோட்டார் ஸ்போர்ட்ஸில் அதிக நாட்டம் கொண்டவர்.

மேரி கோம்
சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரை 6 முறை வென்ற ஒரே பெண் மேரி கோம். அதுமட்டுமல்லாமல் 7 உலக சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து பதக்கம் வென்ற ஒரே பெண்ணும் மேரி கோம் மட்டும்தான். இந்தியாவில் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின்னரும் விளையாட்டில் தனது கனவை எட்டிப் பிடித்து உலகையே திரும்பி பார்க்க வைக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர் மேரி கோம்.

பிடி உஷா
இந்திய தடகளத்தின் ராணி யாரென்று கேட்டால், கண்களை மூடி கொண்டு பிடி உஷா என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு தனது வாழ்நாளில் தடகளத்தில் ஆதிக்கம் செலுத்தியவர். பதக்கத்தை வென்றிருந்தால், அன்று மட்டும் கொண்டாடப்பட்டிருப்பார். ஆனால் 4வது இடத்தில் முடித்து ஒலிம்பிக் பதக்கத்தை தவறவிட்டதால், அவரின் கனவை இளம் தலைமுறைக்கு விதைத்து தயார் செய்து வருகிறார்.

-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications