மகளிர் இடஒதுக்கீடு: 2029-லும் வராது.. 2 தடைகளை வச்சிருக்காங்க..மத்திய அரசு மீது ப.சிதம்பரம் அட்டாக்
சென்னை: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமாகிய நிலையில், இந்த சட்டம் 8 ஆண்டுகளுக்கு அமலுக்கு வராது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் இந்த மசோதா தற்போது சட்டமாகி இருக்கிறது. அதன் விதியின்படி, அதிகாரபூர்வ அரசிதழில் மத்திய அரசு வெளியிடும் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த மசோதா 2029 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படும் நிலையில், 2029- ஆம் ஆண்டிலும் வர வாய்ப்பு இல்லை என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியதாவது:- நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் சட்டமன்றத்திலும், நாடாளுமன்ற மக்களவையிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
மசோதா சட்டமாகியிருக்கிறதே தவிர.. சட்டம் அமலுக்கு வரவில்லை.. அமலுக்கு வராது.. இது வாணவேடிக்கை காட்டுகிறார்கள்.. இந்தியில் சும்லா என்று ஒரு வார்த்தை. அதற்கு ஈடான தமிழ் சொல்லை காணவேண்டும். இது சும்மா மாயாஜாலம் மாதிரி. இந்த சட்டத்தில் 1996 ஆம் ஆண்டில் பிரதமர் தேவேகவுடா அவர்கள் அறிமுகம் செய்த மசோதா.. அதற்கு பிறகு 2 முறை பிரதமரான வாஜ்பாய் அவர்கள் இந்த மசோதாவை செயல்படுத்த முயற்சி எடுத்தார்.
ஆனால் அவரது முயற்சி வெற்றி பெற வில்லை. 9.03.2010-ம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இதில், 1996, 1999, 2000, 2010 என அனைத்து மசோதாக்களிலும் வேறுபாடு கிடையாது. அதே மசோதாவை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து இறுதியில், மாநிலங்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டது. இப்போ வந்திருக்கும் மசோதா அதே மசோதாவை, அதே வரைவு சட்டத்தை அறிமுகப்படுத்தி ஒப்புதல் தந்திருந்தால் 2024 தேர்தலிலேயே அமலுக்கு வரும்.
ஆனால் அவர்கள் விஷமத்தனமாக வேண்டுமென்றே இரண்டு தடைகளை வைத்திருக்கிறார்கள். ஒரு தடை என்னவென்றால் மக்கள் கணக்கெடுப்பு, அடுத்த தடை என்னவென்றால் தொகுதி வரையறை. இதனை வேகத்தடைகள் என்று கூட நான் சொல்ல மாட்டேன். நிரந்தரமாக சுவரை எழுப்பியிருக்கிறார்கள். இந்த சுவரை உடைத்துக்கொண்டு இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்றால், என்னுடைய கணக்குப்படி 2024 தேர்தலுக்கு வராது.. 2029 தேர்தலுக்கும் வராது.. இதைப்பற்றி விவாதம் செய்ய தயார்..
காரணம் என்ன? அரசியல் சாசனத்தில் 82-வது பிரிவில் 3வது விலக்கு என்ன சொல்கிறது, 2026க்கு பிறகு நடைபெற கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் இந்த பொருளுக்கு பொருந்தும். 2026-ம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துகிறார்கள் என்றால், கடந்த முறை 2011 ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட 2 ஆண்டு ஆகியது. இந்த முறை ஒன்றரை ஆண்டுகளில் முடிப்பார்கள் என்றால் 2026ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கி அதன் முடிவினை வெளியிட 2028ம் ஆண்டு ஆகிவிடும்.
2028 ம் ஆண்டுக்கு பிறகு அடுத்த தடை கல் என்னவென்றால் தொகுதி மறுவரையறை.. இதற்கு நாடாளுமன்றத்தில் உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த சட்டத்தை 2 நாட்களில் நிறைவேற்றுகிறார்கள் என்றால், அடுத்ததாக இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். இதற்கு எவ்வளவு வேலை இருக்கிறது. கடந்த முறை தொகுதி மறுவரையறை செய்த போது 6 ஆண்டுகள் நடந்தது.
இந்த முறை 4 ஆண்டுகளில் இந்த பணி முடியும் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.. அப்படி நடந்தால், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்க 2028ம் ஆண்டும், தொகுதி மறுவரையறை செய்து முடிக்க 4 ஆண்டுகள் சேர்த்து 2032ம் ஆண்டும் என இரண்டையும் செய்து முடிக்க 2032-ம் ஆண்டு ஆகிவிடும். ஆக 2024 தேர்தலிலும் வராது.. 2029 தேர்தலிலும் இந்த சட்டம் வராது.. 2034 தேர்தலில் வந்தால் மகிழ்ச்சி. ஆக இது வேண்டும் என்றே விஷமத்தன்மையோடு செய்த தடைக்கற்கள்.
இந்த மசோதா மீது அரசுக்கு நம்பிக்கை கிடையாது. பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயம். ஆனால் ஒரு மசோதாவை அமல்படுத்தியதாக சும்மா விளம்பரம் தான் செய்கிறார்கள். உண்மை என்னவென்றால் சட்டம் அமலுக்கு வராது.. இன்னும் 7, 8 ஆண்டுகளுக்கு இந்த சட்டம் அமலுக்கு வராது என்பதை மக்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன். இவ்வாறு ப சிதம்பரம் கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications