பங்காரு அடிகளார் அப்பவே சொன்னாரே.. இறந்த பின்பும் அப்படியே நடக்கும் அதிசயம்.. வியந்து போன மக்கள்
சென்னை; மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவை அடுத்து அவரின் பீடத்தில் நடக்கும் சம்பவம் ஒன்று மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். 82 வயதாகும் பங்காரு அடிகளார் இன்று மாலை மரணம் அடைந்தார். முக்கியமாக இதயவலி காரணமாக அவர் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இன்றும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. அவருக்கு மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது . இதை தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
மக்கள் வருகை: இதையடுத்து இவருக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாட்டின் பல பக்கங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். வடமாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இங்கே குவிய தொடங்கி உள்ளன. பெண்கள் அதிக அளவில் இங்கே குவிந்து உள்ளனர்.

சிவப்பு உடையில் பெண்கள் பலர் கும்பல் கும்பலாக இங்கே குவிந்து வருகின்றனர். அதேபோல் ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கே குவிய தொடங்கி உள்ளனர். நேற்று மாலையில் இருந்தே மக்கள் இங்கே குவிந்து வருகின்றனர். இன்றும் அதிகாலை பெண்கள், மக்கள் பலரும் இங்கே கும்பல் கும்பலாக குவிந்தனர்.
உணவு வழங்கப்படுகிறது: இங்கே தற்போது வரக்கூடிய மக்கள் எல்லோருக்கும் உணவு வழங்கப்படுகிறது. நேற்று இரவு டீ கொடுக்கப்பட்டது தொடங்கி அதிகாலையில் இருந்தே உணவு வழங்கப்படுகிறது. அதிகாலை 7 மணிக்கே இட்லி, பொங்கல் உணவு வழங்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள் தனி தனியாக உணவு வழங்கின.
ஆங்காங்கே ஸ்டால் அமைத்து தன்னெழுச்சியாக இவர்கள் உணவு வழங்கினார்கள். பல அமைப்புகள் இங்கே வந்து உணவு தயாரித்து இலவசமாக அங்கே வரும் மக்களுக்கு வேண்டும் என்கிற அளவிற்கு உணவு வழங்கினார்கள். பங்காரு அடிகளார் மூலம் பலன் அடைந்தவர்கள்.. அவர் சொன்ன வார்த்தைகள் மூலம் குணம் அடைந்தவர்கள்.. பல நோய்களில் இருந்து விடுபட்டவர்கள் எல்லாம் இங்கே வந்து உணவு வழங்கி வருகின்றனர்.
( திடீர் மாரடைப்பு.. அதற்கு முன் நெஞ்சு வலி.. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு நடந்தது என்ன? )
இவருக்கு பல கோடீஸ்வரர்கள், பணக்காரர்கள் கூட தீவிர பக்தர்களாக இருந்தனர். அவர்கள் எல்லாரும் இங்கே வந்து தற்போது பங்காரு அடிகளாரின் பக்தர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். அதிசயம்: பங்காரு அடிகளார் இருக்கும் போது அடிக்கடி தர்மம் என்ற வார்த்தையை கூறுவார். அதில் மக்களுக்கு உணவு அளிப்பதே தர்மம். அதுவே முக்கியமானது. அந்த தர்மமே நம்மை காக்கும். உணவு வழங்கும் தர்மமே நம் உயிர் காக்கும் என்று கூறி வந்தார்.
அவர் இறந்த நாளில் அவரின் சொல்லை கேட்டு.. அவரின் ஏகப்பட்ட பக்தர்கள் அப்படியே மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மக்களின் இந்த செயல் மேல்மருவத்தூர் மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பின்னணி: மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடம் இயங்கி வருகிறது. இந்திய பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார்.
ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்தவர் என்று அழைக்கப்பட்டவர் இவர். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர் பங்காரு அடிகளார்.ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தவர்.
பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் பலர் இவரை தீவிரமாக பின்பற்றி வந்தனர். பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications