வில்லங்க சான்றிதழ்..பிழை திருத்தம் செய்யும்போது "வில்லங்கம்" வருதே எப்படி? சொத்து விவகாரத்தில் கவனம்
சென்னை: வில்லங்க சான்றிதழ் என்றால் என்ன? இதன் முக்கியத்துவம் என்ன? வில்லங்க சான்றிதழ்களில் திருத்தம், பிழைகளை செய்ய முடியுமா? இதற்கு தமிழக அரசு என்ன வழிவகை செய்து தந்துள்ளது.. இங்கே சுருக்கமாக காண்போம்
நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க நினைப்பவர்கள், சட்டப்படி அந்த இடங்கள் இல்லாமல் சரியானவைதானா? சம்பந்தப்பட்ட சொத்துக்கு முந்தைய உரிமையாளர்கள் இருக்கிறார்களா? அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா? என்பதையெல்லாம் முன்கூட்டியே அறிய வேண்டும்.

இவைகளை தெரிந்து கொள்வதற்காகத்தான், வில்லங்க சான்றிதழ்களை பெறுவார்கள். இதன்மூலம், விலைகொடுத்து வாங்கப்போகும் அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்தான் வில்லங்க சான்றிதழாகும்.
சொத்துக்கள்: நீங்கள் வாங்க முயலும் சொத்துக்கள், இதற்கு முன்பு யார் யாரிடம் இருந்தது? எந்தெந்த ஓனர்கள் சொத்தினை அனுபவித்தார்கள்? என்கிற விவரங்களும் வில்லங்க சான்றிதழில் பதிவாகியிருக்கும்.அந்த சொத்துக்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்யவே, வில்லங்க சான்றிதழ்கள் தேவையாயிருக்கின்றன.
அதேபோல, அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெற வேண்டுமானாலும், இந்த வில்லங்க சான்றிதழ்கள் தேவையானதாக இருக்கின்றன.. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால்தான், வில்லங்க சான்றிதழ் பெறுவதில் தமிழக அரசும் பல்வேறு வசதிகளை பொதுமக்களுக்கு செய்து தந்துள்ளது.
வில்லங்க சான்றிதழ்: குறிப்பாக, வில்லங்க சான்றிதழில் பிழைகள் ஏதாவது இருந்தால் அதை திருத்த உரிய விண்ணப்பம் பெறப்படும். இதன் அடிப்படையில் சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து வரைவு திருத்த விபரங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லும். அங்கு தான் இந்த பிழைகள் திருத்தப்படும்.
இதற்கு பதிவுத்துறையின் tnreginet.gov.in என்ற இணையதளத்தில், 'அட்டவணை தரவு திருத்தம்' என்ற தெரிவின் வழி சென்று, பொதுமக்கள் ஆனலைன் வழியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே பெறப்பட்டு, சார் - பதிவாளரால் சரி பார்க்கப்பட்டு, மாவட்டப் பதிவாளரின் ஒப்புதலுடன், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதுதான் பொதுவான நடைமுறையாகும்.. இதில்தான், 2 நாட்களுக்கு முன்பு டிஐஜி ரவீந்திரநாத் சிக்கி கைதாகியுள்ளார்.
தாம்பரம் : தாம்பரத்தில் நடந்த நில மோசடி விவகாரத்தில், வில்லங்க சான்றிதழில் 8 முறை திருத்தங்கள் செய்ய, தென்சென்னை மாவட்ட பதிவாளராக இருந்த ரவீந்திரநாத் உடந்தையாக இருந்ததாக மணிமொழியான் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.. 8 முறை முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றி வைத்திருக்கிறாராம்.
விளக்கம்: இதற்கு ரவீந்திரநாத் "தினமும் நூற்றுக்கணக்கான கோப்புகளை பார்க்கிறேன். அவசரத்தில் குறிப்பிட்ட நிலப்பத்திரம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டேன். இதற்காக ஆதாயம் எதுவும் பெறவில்லை" என்றாராம்.
ஆனால், இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, மாவட்ட பதிவாளர் தன்னுடைய கைரேகையை பதிவிட்டு, டிஜிட்டல் கையெழுத்தை பயன்படுத்தி தான் அனுமதிக்க முடியும். அப்படி அனுமதிக்கும்போது, மாவட்ட பதிவாளர் மிக கவனமாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சொத்தின் வில்லங்க சான்றிதழில், ஏன் 8 முறை திருத்தங்கள் செய்யப்படுகின்றன என்பதை, மாவட்ட பதிவாளராக இருந்த ரவீந்திரநாத் கவனிக்க தவறியது குறித்து விசாரிக்கப்படுகிறது.
ஏற்க முடியாது: சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல், வில்லங்க சான்றிதழில் 8 முறை திருத்தங்கள் செய்வதை, எந்த அதிகாரியாக இருந்தாலும் ஏன் என்று விளக்கம் கேட்டிருப்பார். இந்த சின்ன விஷயம் கூட தெரியாமல், ரவீந்திரநாத் வேலை செய்திருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவசரத்தில் கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது" என்றார்
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications