வேளச்சேரி-தாம்பரம் ரூட்டில் போறீங்களா? உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்.. இனி எல்லாமே மாற போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளச்சேரி-தாம்பரம் சாலையில் கௌரிவாக்கம் மற்றும் சேலையூரில் உள்ள இரண்டு முக்கியமான சாலைகளை விரிவுபடுத்துவதற்கு மாநில அரசு வழிவகை செய்துள்ளது.

இங்கே நிலம் கையகப்படுத்துவதற்கு சுமார் ₹31 கோடியை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் உள்ள சாலை நான்கு வழிச்சாலையாக மட்டுமே உள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்க 6 வழி சாலையாக இதை அகலப்படுத்த வேண்டும். இதற்கான பணிகள் இங்கே விரைவில் தொடங்க உள்ளன.

Works to start for widening of two stretches of Velachery- Tambaram Road

16 கி.மீ நீளமுள்ள சாலையில் இந்த இரண்டு இடங்களைத் தவிர்த்து ஒரே சீராக ஆறு வழிச்சாலையாக உள்ளது., பள்ளிக்கரணையில் உள்ள 3 கி.மீ நீள சாலை இதேபோல் 4 வழி சாலையாக உள்ளது. இங்கே நிலம் கையகப்படுத்தும் பணி இறுதிக்கட்ட நிலையில் உள்ளது. நாராயணபுரத்தில் இருந்து தனியார் டெக்ஸ்டைல் ​​ஷோரூம் வரையிலான சாலையில் பெரிய வளைவும் உள்ளது. நிலங்களின் வகைகள் மற்றும் சொத்துகளின் உரிமைகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இங்கே விரைவில் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். தாமரைக்குளம் உள்ள இடத்தில், குளம் பாதிக்கப்படாத வகையில், எதிர்புறத்தில் உள்ள சொத்துக்கள் கையகப்படுத்தப்படும். சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு சாலையின் பாதை சற்று மாற்றப்படும். இதனால் போக்குவரத்து எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சாலை மாற்றம்: இதேபோல் எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கை தவிர்க்கும் வகையில், வேளச்சேரி நெடுஞ்சாலையின் உயரத்தை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் விரைவில் அதிகரிக்க உள்ளனர்.

சென்னையில் தாழ்வான பகுதி என்று கருதப்படும் வேளச்சேரி பகுதியில் கடந்த டிசம்பரில் மிக கனமழை பெய்தது. அங்கே கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. சென்னையின் மற்ற பகுதிகளில் வெள்ளம் 1 நாளில் வடிந்தது. வேளச்சேரியில் மட்டும் வெள்ளம் வடிவதற்கு 2-3 நாட்கள் ஆனது. சென்னையின் பல பகுதிகள் ஏற்கனவே ஒரு காலத்தில் நதியாக இருந்த பகுதிகள் ஆகும். இப்போது ஆக்கிரமிப்பு காரணமாக வீடுகளாக, குடியிருப்புகளாக மாறி உள்ளன. இதுவே அங்கு வெள்ளம் தேங்க காரணம் ஆகும்.

வேளச்சேரிதான் இந்த வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கே வெள்ள நீர் வெளியேறும் அமைப்புகள் இருந்தாலும் கூட தாழ்வான பகுதிகள் என்பதால் தண்ணீர் வெளியேறாமல் இருந்தது. இங்கே வெள்ளம் ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று அங்கே செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகள் ஆகும்.

சாலையை மாற்ற முடிவு: எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கை தவிர்க்கும் வகையில், வேளச்சேரி நெடுஞ்சாலையின் உயரத்தை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் விரைவில் அதிகரிக்க உள்ளனர். சாலையின் உயரத்தை அதிகரித்து வெள்ளத்தை வெளியேற்றும் சூழலை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். டிப்-ரைசிங் எனப்படும் ஒரு நுட்பம் மூலம் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் பிட்மினஸ் அடுக்குகள் மற்றும் ஈரமான மண் கலவை சாலையின் உயரத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும்.

முதற்கட்டமாக ரூ. 5 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் பாலம் மற்றும் காமாட்சி மருத்துவமனை பாலம் ஆகிய இரு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். அதன்பின் இந்த சாலைகள் உயர்த்தப்படும்.

இதன் மூலம் சாலையின் உயரம் அதிகம் ஆகும். இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்குவது குறையும். அதேபோல் தண்ணீர் எளிதாக வெளியேறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+