உலக சிறுநீரக தினம் : கிட்னி கோளாறுக்கும் சுக்கிரனுக்கும் என்ன தொடர்பு - பரிகாரம் என்ன?

சிறுநீரகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக சர்வதேச சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் மார்ச் மாதம் 2-வது வியாழக்கிழமையை சர்வதேச சிறுநீரக தினமாக கடைபிடிக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சர்வதேச சிறுநீரக தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் மாதம் 2வது வியாழக்கிழமையை சர்வதேச சிறுநீரக தினமாக கடைபிடிக்கின்றனர். நம் உடல் ஆரோக்கியமாக இருக்க பல நன்மைகளைச் செய்யக்கூடிய சிறுநீரகத்தை பாதுகாக்க நன்றாக தண்ணீர் குடித்தாலே போதும் சிறுநீரகம் ஆரோக்கியமாக அதன் வேலையையும் சிறப்பாகச் செய்யும். நோய்களுக்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது சிறுநீரக கோளாறு ஏற்பட எந்த கிரகம் காரணம் என்ன பரிகாரம செய்யலாம் என்று பார்க்கலாம்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் அதிகமான நீர் அருந்துங்கள் என்கிற மருத்துவக் குறிப்பை பல இடங்களில் படித்திருப்பீர்கள். காரணம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்காகவே அவ்வாறு சொல்லப்படுகிறது. அதன் பலன் சிறுநீரகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உடலுக்கும் மிக முக்கியமானது.

இரத்தத்தை சுத்திகரிக்கும் செயலை சிறுநீரகம் தான் செய்கிறது. அதனால் பெறப்பட்ட கழிவுகளையும் வெளியேற்றுகிறது. உடல் நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் புரோட்டீன்களை உறிஞ்சிவிட்டு வெளியேற்றும் நச்சுக் கழிவுகளையும் சிறுநீரகப் பைகள்தான் சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன.

நடிகர் சூர்யா விழிப்புணர்வு

சிறுநீரக செயலிழப்பு என்பது ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கும். எந்த வயதிலும் சிறுநீரக செயலிழப்பு வரலாம். குழந்தைகளை பொறுத்தளவில் மிகவும் எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் சிறுநீரகம் செயலிழப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. சிறுநீராக நோய் இருந்தாலும் நன்றாக வாழலாம் என்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

சிறுநீரக நோய்க்கு காரணம்

சிறுநீரக நோய்க்கு காரணம்

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை சிறுநீரகம் செயல் இழக்க காரணமாகிறது. நீர் வறட்சி, வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வது சிறுநீரக பிரச்சினைக்கு காரணமாகும். நோய் முற்றிய பிறகுதான் சிறுநீராக கோளாறு ஏற்படும். சர்க்கரை நோயையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் சிறுநீரகம் பாதிப்படைவதை தடுக்கலாம்.
இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 65 ஆயிரம் பேர். இதில் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேருக்கு டயாலிசிஸ் அல்லது கிட்னி மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கழிவு நீர் வெளியேற்றும்

கழிவு நீர் வெளியேற்றும்

உடலில் தேவையான அளவு நீர் எப்போதும் இருக்க வேண்டும். அதுதான் நாம் உயிர் வாழ்வதற்கும் அடிப்படை. நீரேற்றத்தின் அளவை கண்காணித்துக் கொண்டிருக்கும் வேலை சிறுநீரகத்துடையது. தேவைக்கு அதிகமாக நீர் இருந்தாலும் அதை சிறுநீராக வெளியேற்றிவிடும். அதன் நீர் வெளியேற்றம் முறையாக நடக்கவில்லை எனில் உடலில் நீர் கோர்த்து கொண்டு குண்டு தோற்றத்தை கொடுத்து விடும். மூச்சிறைப்பு போன்ற நோய்கள் வர காரணமாகிவிடும்.

ரத்த பரிசோதனை

ரத்த பரிசோதனை

உடலில் சுரக்கக் கூடிய சோடியம், பொட்டாசியம், ஹைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற மினரல் மற்றும் கெமிக்கல்களை சரியான அளவில் பேலன்ஸ் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது சிறுநீரகம். இரத்தத்தில் கிரியேட்டினைன் மற்றும் யூரியா இருக்கும். இரத்த சோதனையில் இவை இரண்டின் அளவை வைத்துத்தான் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைக் கண்டறிவார்கள். அதன் அளவை சீராக வைத்துக்கொள்வது சிறுநீரகத்தின் வேலையே. சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்தால் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

சிறுநீரக நோய் ஏற்பட காரணம்

சிறுநீரக நோய் ஏற்பட காரணம்

ஜோதிடத்தில் மனித உடலில் சிறுநீரகத்தையும் அதன் செயல்பாட்டையும் குறிப்பவை துலாம் ராசியும் சுக்கிரனும்தான். ரிஷபம், துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமரும் இவர் மீனம் ராசியில் உச்சமடைகிறார். சுக்கிரன் பாதிக்கப்பட்டால் கிட்னி நோய்கள் சிறுநீரக கற்கள், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்படும். பெண்களுக்கு சிறுநீராக கோளாறுகள், கருப்பை கோளாறுகள் விந்தணு கோளாறுகள் ஏற்படும். மர்மநோய்கள் ஏற்படும் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

ராகு கேது சுக்கிரன்

ராகு கேது சுக்கிரன்

துலாம் ராசி கால புருஷ தத்துவப்படி ஏழாம் ராசி. சுக்கிரன் துலாம் ராசியின் அதிபதி. சுக்கிரன் களத்திரகாரகன் அவரே ஏழாம் வீட்டு அதிபதி. ஒருவரின் ஜாதகத்தில் துலாம் ராசியும் சுக்கிரனும் ராகு கேது உடன் தொடர்பு ஏற்பட்டிருந்தால் சிறுநீராக கோளாறு ஏற்படும். டயாலிசிஸ் சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

சிறுநீரக நோய் நீக்கும் நடராஜர்

சிறுநீரக நோய் நீக்கும் நடராஜர்

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இங்குள்ள பஞ்சந்தன நடராஜர் ஸ்தலம் சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு நேரத்தில் ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+