மனதை விட்டு மறையாத கேப்டன் விஜயகாந்த்! 125 நாளில் 15 லட்சம் பேர் அஞ்சலி..உலக சாதனை அங்கீகாரம்..!
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்திடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச் சின்னமாக இது போற்றப்படுகிறது.
தமிழக மக்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்ட நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நிலை குறைபாட்டால் காலமானார்.

இதையடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கேப்டன் விஜயகாந்த்: தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் இலட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமல்லாமல் அப்போதைக்கு நெரிசல் காரணமாக பலர் சென்னை வருவதை தவிர்த்த நிலையில் தற்போது வரை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
நினைவிடம்: வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் நிச்சயம் விஜயகாந்தின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்து வருகின்றனர். மேலும் பலர் முடி காணிக்கையும் செலுத்தி வருகின்றனர். இதை அடுத்து பொதுமக்கள் மற்றும் விஜயகாந்தின் ரசிகர்களுக்காக நினைவு இடத்தில் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த் சினிமா துறையில் இருந்த போதும் அரசியலில் நுழைந்த போதும் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அன்னதானம்: குறிப்பாக திரைத்துறையில் சிரமத்தில் இருக்கும் உதவி இயக்குனர்களுக்கு அவரது அலுவலகத்தில் 24 மணி நேரமும் உணவு வழங்கப்படுவது வழக்கம். தற்போது வசதியுடன் இருக்கும் பெரிய பெரிய பிரபலங்கள் கூட ஒரு காலத்தில் சிரமப்பட்ட போது விஜயகாந்தின் அலுவலகத்தில் தான் சாப்பிடுவோம் என தற்போது வரை பெருமையுடன் கூறி வருகின்றனர். அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே தற்போது அவரது நினைவிடத்தில் வரும் மக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் கூட்டம்: கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள்.. அப்படி அதிரடியான பேச்சு அரசியல் செயல்பாடுகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் தொண்டர்களை பார்த்தவுடன் குழந்தையாக மாறிவிடும் விஜயகாந்த், தொடர்ந்து பலருக்கு உதவிகளும் செய்து இருக்கிறார். அதன் காரணமாகத்தான் அவர் இறந்து 4 மாதங்களை கடந்த போதிலும் தற்போது வரை அவர் நினைவிடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது மேலும் தொடர்ந்து அவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
உலக சாதனை: இந்த நிலையில் தான் விஜயகாந்தின் நினைவிடத்தில் இதுவரை 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதனை உலக சாதனையாக அங்கீகரித்து லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவு சின்னமாகவும் விஜயகாந்தின் நினைவு இடம் போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த விருது அவரது நினைவிடத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications