தலித்துகளின் மீதான தீண்டாமை மனோபாவத்தை உரக்க சொன்னவருக்கு விருது! யார் இந்த எழுத்தாளர் பாமா?
சென்னை: இந்த ஆண்டிற்கான வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதை எழுத்தாளர் பாமாவுக்கு நீலம் பண்பாட்டு மையம் அளித்தது.
வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது ஆண்டுதோறும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த நிகழ்வு இரு நாட்களாக நடந்தது.

ராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ்ப் பேரவையில் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் இந்த விழா நடந்தது. இதில் இந்த ஆண்டு வேர்ச்சொல் தலித் இயக்கிய விருது எழுத்தாளர் பாமாவுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த விருதுடன் ரூ 1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் 6 அமர்வுகள் இடம் பெற்றன. இதில் தமிழ் இலக்கியத்தின் திசை வழி என்ற எழுத்தாளர் பாமாவின் நூல் வெளியீடு நடந்தது. மேலும் அவர் குறித்த ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் இலக்கிய புத்தக கண்காட்சியும் நடந்தது. வேர்சொல் தலித் இலக்கிய விருதை பெற்ற பாமா தலித் இலக்கியங்களை படைப்பவர். இவர் 1992 ஆம் ஆண்டு எழுதிய கருக்கு எனும் புதினம் புகழ் பெற்றது. இது தலித் மக்கள் மொழியை பயன்படுத்தி எழுதிய. ஆசிரியையாக பணிபுரிந்தவர் பாமா. இந்த புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழகத்தில் அறுபதுகளில் பிறந்து இன்று ஆசிரியப் பணியாற்றும் பாமா தலித்திய நாவலாசிரியர்களில் முக்கியமானவர். இவர் 1994 ஆம் ஆண்டு சங்கதி என்ற நாவலையும் படைத்தார். இது மிகச் சிறந்த தலித்திய நாவலாகும். இவரின் முதல் நாவலான கருக்கு தமிழின் முதல் தலித் இலக்கியத் தன்வரலாற்று நாவல் என அனைவராலும் பாராட்டப்பட்டது.
கிறிஸ்துவ துறவியாக தென் மாவட்ட கிராமம் ஒன்றில் தான் பெர்ற அனுபவங்களையே இவர் எழுத்தாக எழுதியுள்ளார். தலித்துகள் மீது மாற்று ஜாதியினரிடம் இருக்கும் தீண்டாமை மனோபாவம், கிராம நிகழ்ச்சிகளிலும், ஊர் திருவிழாக்களிலும் பங்கு கொள்ள முடியாது தனித்து விடப்பட்ட சோகங்கள், பள்ளி, கல்லூரிகளில் தலித் மாணவர்கள் எதிர்கொண்ட அவமானங்கள் ஆகியவற்றை பற்றி இவர் எழுதியுள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு வன்மம், மனுசி ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். அது போல் கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் என்ற 3 சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். வருகை தரு இலக்கிய ஆளுமை என்ற தமிழ்ப் பல்கலைக்கழகம் விருது அளித்தது.
சென்னையில் புதுபட்டியில் 1958 ஆம் ஆண்டு ஃபாஸ்டினா மேரி பாத்திமா ராணியாக பிறந்தார். இவர் பிறகுதான் தனது பெயரை பாமா என மாற்றி கொண்டார். இவர் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருக்கு வயது 66. இவருடைய தந்தை சூசைராஜ், ராணுவத்தில் பணிபுரிந்தார். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ராஜ் கவுதமனின் சகோதரி. இவரும் வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதை பெற்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications