ட்விட்டரை திறந்தால் அதிர்ச்சி.. "என்ன இப்படி ஆகிடுச்சு.." அமெரிக்கா டூ இந்தியா.. அலறிய நெட்டிசன்கள்
சியாட்டில்: இன்று மாலை உலகெங்கும் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைத்தளம் முடங்கியது. இதனால் உலகெங்கும் உள்ள ட்விட்டர் யூசர்கள் தளத்தைப் பயன்படுத்த முடியாமல் அவதியடைந்தனர். இந்தியாவிலும் பெரும்பாலான யூசர்களுக்கு ட்விட்டர் தளம் முடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகெங்கும் அதிக யூசர்களை கொண்ட சமூக வலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். இந்த ட்விட்டர் தளத்தைக் கடந்த 2022ம் ஆண்டு பிரபலத் தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியிருந்தார். அதன் பிறகு எலான் மஸ்க் ட்விட்டரை எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து நடத்தி வருகிறார். மேலும், எக்ஸ் தளத்தில் அவர் ஏகப்பட்ட மாற்றங்களையும் கொண்டு வந்தார்.

இதில் சில மாற்றங்கள் நெட்டிசன்களையே வரவேற்பைப் பெற்றாலும், பெரும்பாலான மாற்றங்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது. இருந்த போதிலும், எலான் மஸ்க் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. ப்ளூ டிக்கிற்கு கட்டணம், க்ராக் ஏஐ என பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
இதற்கிடையே 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளம் உலகெங்கும் இன்று முடங்கியது. சற்று நேரத்திற்கு முன்பு தான் உலகெங்கும் இந்த தளம் முடங்கியது. இந்தியாவிலும் இதன் தாக்கம் இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான இந்திய யூசர்களால் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை. சுமார் 30,000க்கும் அதிகமானோர் தங்களால் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை எனப் புகாரளித்துள்ளனர்.
அமெரிக்காவிலும் 23,210க்கும் அதிகமான இதே புகாரை முன்வைத்துள்ளனர். எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கிய பிறகு எக்ஸ் தளம் நிலையாகவே இருந்துள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற மற்ற சமூக வலைத்தளங்களுடன் ஒப்பிடுகையில், எக்ஸ் அரிதாகவே செயலிழந்தது. இருப்பினும், இன்றைய தினம் எக்ஸ் தளம் முடங்கிய சூழலில், இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications