Year Ender 2023: வள்ளலுக்கெல்லாம் வள்ளல்! சிவராத்திரியில் சிவனடி சேர்ந்த மயில்சாமியை மறக்க முடியுமா?
சென்னை: வாரி வாரி கொடுத்த வள்ளல், சிவராத்திரி அன்று சிவனடி சேர்ந்த சிவ பக்தர், புயல், மழை, கொரோனா காலங்களில் ஊருக்கே உணவு அளித்தவர் மயில்சாமியின் இறப்பை மறக்க முடியுமா?
புத்தாண்டு பிறக்கும் போதெல்லாம் கடந்த ஆண்டின் நினைவுகளை அசைபோடும் போது அதில் இருக்கும் சுவாரஸ்யங்கள், சந்தோஷங்களை நினைத்து எப்படி மகிழ்கிறோமோ அது போல் துக்கமான விஷயங்களுக்காகவும் நாம் வருந்தி வருகிறோம்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில் 2023 ஆம் ஆண்டு இறந்த ஒரு பிரபலம் குறித்து பார்ப்போம். அவர் நடிகர், காமெடியன், மிமிக்ரி கலைஞர், குணச்சித்திர நடிகர்... எல்லாவற்றையும் விட நல்ல மனிதர்.. சாலிகிராமத்தில் வசித்த ஏழைகளின் சாமி! மயில்சாமி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தவர் முதன்முதலில் மிமிக்ரி செய்து பிரபலமானார். இசைக் கருவிகள், விலங்குகளின் சப்தம் உள்ளிட்டவைகளை அறிமுகப்படுத்தினார். பிறகு நம்பியார், எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மாதிரி பேசி அசத்தினார். 1984 ஆம் ஆண்டு சினிமாவுக்கு வந்தார். முதலில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
பிறகு ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினி நடித்த பணக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விவேக்குடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பது 4 காசு பார்ப்பது என இல்லாமல் சமூக அக்கறையுடன் இருந்தார்.
யாராவது இல்லை என வந்து கேட்டால் போதும் தனக்கு கூட இல்லாமல் அள்ளிக் கொடுத்துவிடுவார். ஒரு முறை ஒரு படத்திற்காக விவேக்குடன் நடித்த போது மயில்சாமிக்கு அவருக்கான பணத்தை விவேக் பிரித்து கொடுத்தார். அப்போது யாரோ குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும் என சொல்லியதும் கையில் வாங்கிய பணத்தை சற்று கூட யோசிக்காமல் கொடுத்துவிட்டாராம். பிறகு ஆட்டோவில் செல்ல விவேக்கிடம் காசு வாங்கிக் கொண்டு வீடு போய் சேர்ந்தாராம். இதை விவேக் ஒரு விழாவில் பெருமையாக கூறினார்.
நிறைய படங்களில் நடித்தாலும் அடித்து பிடுங்கி சொத்து சேர்க்க வேண்டும், தனக்கான ஊதியத்தை தன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என இல்லாமல் எப்போதும் ஊருக்கு உழைத்துக் கொண்டே வந்தார். பொதுவாக நல்லவர்களாக இருந்தால் தவறு என நினைக்கும் அளவுக்கு நல்லவர்களை காலன் கொண்டு செல்வதை பார்த்தாலே நமக்கு உணர்த்துகிறது.
அந்த வகையில் மயில்சாமி இந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி நம்மை விட்டு பிரிந்து விட்டார். அதிலும் சிவ பக்தி கொண்ட அவர் சிவராத்திரி அன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் டிரம்ஸ் சிவமணியுடன் பக்தி பாடல்களை கேட்டுவிட்டு வீடு திரும்பினாராம். அப்போது பசிக்காக இட்லி சாப்பிட்டுள்ளார். பின்னர் தனது மகனிடம் இட்லி நெஞ்சுக்குள்ளேயே இருப்பது போல் இருப்பதாக சொல்லியுள்ளார்.
உடனே அவரை மகன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாராம். அப்போது முன் சீட்டில் அமர்ந்திருந்த மயில்சாமி காரை ஓட்டிச் சென்ற மகன் மீது அப்படியே சாய்ந்துள்ளார். உடனே வண்டியை நிறுத்திவிட்டு அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுநர்களின் உதவியுடன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாரடைப்பால் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவ பெருமான் மீது தீவிர பக்தி கொண்ட மயில்சாமி சிவராத்திரி அன்றே இறைவனடி சேர்ந்தாலும் அவர் நிழலில் வாழ்ந்து கொண்டிருந்த எத்தனையோ ஏழைகள் கண்ணீருடன் காத்திருக்கிறார்கள். அவர் மீண்டும் வருவாரா என! 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே மயில்சாமி இறந்த நிலையில் இந்த ஆண்டை அவருடைய நலம் விரும்பிகள் கருப்பு ஆண்டாகவே பார்த்தார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications