ப்ளாஷ் பேக் 2023: மனித குல வரலாற்றில் நாசா படைத்த மகத்தான சாதனை! பென்னு விண்கல் ஆய்வு நினைவிருக்கா?
சென்னை: சந்திரயான் 3 வெற்றி மூலம் இந்தியாவின் இஸ்ரோ, 2023ம் ஆண்டில் பெரும் சாதனையை படைத்திருக்கிறது. அதேபோல அமெரிக்காவின் நாசா '101955 பென்னு' விண்கல் ஆய்வு மூலம் 2023ல் மிகப்பெரிய வரலாற்று சாதனையை பதிவு செய்திருக்கிறது.
இந்த உலகம் எப்படி உருவானது? உலகில் உயிர்கள் உருவானது எப்படி? உயிர்கள் உருவாக அடிப்படையாக இருந்த தண்ணீர் எப்படி பூமியில் உருவானது? என்பது குறித்து மனிதர்களாகிய நாம் நீண்ட தேடலை மேற்கொண்டு வருகிறோம். தற்போது வரை நாம் விண்வெளி துறையில் மேற்கொண்ட அனைத்து ஆய்வுகளுக்கும் அடிப்படை இதுதான். பூமி எப்படி உருவானது என்பது முழுமையாக தெரியவில்லை என்றாலும், அது உருவாக தொடங்கிய போது ஒரு நெருப்பு பந்தை போல இருந்தது என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கிறார்கள்.

அப்படியெனில் கடல்கள் எல்லாம் ஆவியாகி இருக்குமே? என்கிற கேள்வி எழுவது இயல்புதான். இந்த கேள்விக்கும் விஞ்ஞானிகள் கருத்தியல் ரீதியாக பதிலை வைத்திருக்கிறார்கள். அதாவது பூமி நெருப்பு பந்தாக இருந்தபோது, சில விண்கற்கள் இதன் மீது மோதியிருக்கின்றன. அந்த விண்கற்களில் தண்ணீர் இருந்திருக்கிறது. அதுதான் பூமிக்கு தண்ணீரை கொண்டு வந்திருக்கிறது. என்று கூறுகிறார்கள். ஆனால் அது கருத்தியலாக மட்டுமே இப்போது வரை இருக்கிறது. இதை உறுதி செய்ய வேண்டும் எனில் விண்கற்களை ஆய்வு செய்ய வேண்டும். இதில்தான் தற்போது விஞ்ஞானிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.
மட்டுமல்லாது விண்கற்களை ஆய்வு செய்வதன் மூலம் சூரிய குடும்பமும், மற்ற கோள்களும் எப்படி தோன்றியது என்பதை புரிந்துகொள்ள முடியும். கோள்கள் உருவாதற்கு சில கரிம சேர்மங்கள் அவசியமானதாகும். பூமியிலும், நிலவு மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களில் இதனை கண்டுபிடிப்பது கடினம். ஆனால் விண்கற்களில் ஈஸியாக கண்டுபிடித்துவிடலாம். இந்த வகையிலும் விண்கற்களை ஆய்வு செய்வது முக்கியமானதாக இருக்கிறது.
எனவேதான் பூமியிலிருந்து சுமார் 200 கோடி கி.மீ தொலைவில் இருக்கும், நமது சூரிய குடும்பத்தை சேர்ந்த 'பென்னு' எனும் விண்கல்லை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது. இந்த விண்கல் நமது பூமி உருவாவதற்கு முன்னரே உருவாகியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், சூரியக் குடும்பம் உருவாதற்கு முன்னரே கூட உருவாகியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனவே கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதியன்று 'ஓசைரிஸ்-ரெக்ஸ்' எனும் விண்கலத்தை நாசா அனுப்பியது.
இது 2 ஆண்டுகளில் பென்னு விண்கல்லை நெருங்கிவிட்டது. இருப்பினும் எந்த இடத்தில் தரையிறங்கி மாதிரிகளை சேகரிப்பது? என்பதை குறித்து தெளிவாக திட்டமிட்ட மேலும் 2 ஆண்டுகள் எடுத்துக்கொண்டு கடந்த 2020ம் ஆண்டு, விண்கல்லுக்கு நெருக்கமாக சென்று மாதிரிகளை சேகரித்தது. பின்னர் 3 ஆண்டுகள் பயணித்து பூமிக்கு அருகே வந்து, கடந்த செப்.25ம் தேதி மண் துகள் கொண்ட விண்கலனை வீசிவிட்டு சென்றது ஓசைரிஸ்-ரெக்ஸ்.
பூமியை நோக்கி சுமார் 43,500 கி.மீ வேகத்தில் வந்த விண்கலன், பாராசூட் உதவியுடன் பத்திரமாக தரையிறங்கியது. மனிதகுல வரலாற்றில் இந்த நாள் மிகவும் முக்கியமானதாகும். 200 கோடி கி.மீ தூரத்தில் உள்ள ஒரு விண்கல்லில் இருந்து மண் துகள்களை சேகரித்து அதை, பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பு இதற்கு பின்னால் இருக்கிறது. இந்த மண் துகளை தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதன் மூலம் விரைவில், இந்த கட்டுரையின் தொடக்கத்தில் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிந்துவிடும். மட்டுமல்லாது இந்த பென்னு விண்கல் 22ம் நூற்றாண்டில் பூமியை தாக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்படி ஏதேனும் சாத்தியம் இருந்தால், அதை எதிர்கொள்ளவும் இந்த ஆய்வு பயன்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எது எப்படியோ, நாம் வாழும் ஒவ்வொரு நொடியையும் அதிகரிப்பதிலும், அர்த்தப்படுத்துவதிலும் விண்வெளித்துறை அளப்பறிய பங்காற்றுகிறது என்பது யதார்த்தமான உண்மை. அந்த வகையில் நாசாவுக்கு 2023ம் ஆண்டு வெற்றியின் ஆண்டுதான்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications