Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவுக்கு தலைவலியைத் தந்த 2025! செந்தில் பாலாஜியும்..பொன்முடியும்! 2 பெரிய ’மேஜர்’ ராஜினாமா! பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025-ல் தமிழக அளவில் அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதே நேரத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அமைச்சரவை மாற்றம் அரங்கேறியது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் சைவம்- வைணவம் குறித்து சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன் முடியும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

2021ஆம் மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வென்ற நிலையில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை அமைச்சரவை மாற்றம் நடந்தது.

முதலில் 2022 மார்ச் மாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டார். அடுத்து அதே ஆண்டில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னரும் துறைகள் மாற்றம் தொடர்ந்தது. 2023ஆம் ஆண்டு முக்கியமான மாற்றம் நடந்தது.

Year Ender 2025 mk stalin ponmudi

தமிழக அரசியல் 2025

அப்போது நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடமிருந்து அந்த துறை எடுக்கப்பட்டு, தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப்பட்டது. பி.டி.ஆருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டது. அதே காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டார். இதற்கிடையே சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அதனால் அவர் வசம் இருந்த மின்சாரம் உள்ளிட்ட துறைகள் மாற்றப்பட்டு மற்ற அமைச்சர்களிடம் ஒதுக்கப்பட்டன. பின்னர் அவர் பிணையில் வெளிவந்தபோது மீண்டும் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

பொன்முடி

அதே நேரத்தில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை ஏற்பட்டதால் அமைச்சர் பொன்முடி பதவியில் இருந்து விலகினார். பின்னர் வழக்கில் தற்காலிக தடை கிடைத்ததால் அவர் மீண்டும் அமைச்சராகவும், அவரிடம் உயர்கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 2024 செப்டம்பர் மாதத்தில் மிகப் பெரிய மாற்றம் மீண்டும் நடந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் சில அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.

செந்தில்பாலாஜி

2025ஆம் ஆண்டில் அரசியலில் மிகப் பெரும் அதிர்வலை கிளப்பிய இரண்டு சம்பவங்கள் என்றால் அது, செந்தில்பாலாஜி ராஜினாமாவும்,பொன்முடி ராஜினாமாவும் தான். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு காரணமாக செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக தொடர வேண்டுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி எழுப்பியது. பதவியில் தொடர்ந்தால் வழக்கில் பாதிப்பு ஏற்படலாம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியதால், அவர் இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை திமுக 'அரசியல் பழிவாங்கல்' என கூறினாலும், இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது உண்மைதான்.

திமுக அரசு

சைவம் - வைணவம் குறித்து பொன்முடி பேசிய சர்ச்சையான கருத்து பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் எதிர்ப்பு அதிகரித்தது. நீதிமன்றமும் கேள்வி எழுப்பிய நிலையில், இறுதியில் பொன்முடி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய அரசியல் சர்ச்சையாக மாறியது. இந்த இரண்டு சம்பவங்களும் திமுக அரசுக்கு பெரும் அழுத்தத்தை உருவாக்கியது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரங்களை தீவிரமாக முன்வைத்து அரசுக்கு சவால் விடுத்ததும் கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+