கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கி மீண்ட கல்லூரி மாணவர்.. இரண்டாவது முறையாக வந்த எமன்.. இப்படியுமா?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கண்ணன்குளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவருடைய மகன் சிபி என்பவர் பால்குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து நேற்று மாலை 3 மணி அளவில் ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றனர். அங்கு சிபி உள்பட 3 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். உற்சாக மிகுதியில் சிபி ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது காப்பாற்றப்பட்ட சிபியை இரண்டாவது முறையாக வந்து எமன் பிடித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கண்ணன்குளம் பகுதியை சேர்ந்த கொத்தனார் ஆன செல்வகுமார் என்பவருடைய மகன் சிபி (வயது 17). இவர் பால்குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான 18 வயதாகும் ஸ்ரீராம் , பள்ளி மாணவரான 16 வயதாகும் ஹரிகரன் ஆகியோரும் நண்பர்கள் ஆவார். இவர்கள் 3 பேரும் நேற்று மாலை 3 மணியளவில் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அங்கு கடலை பார்த்த உடன் சிபியும், ஸ்ரீராமும் கடலில் குளிக்க இறங்கி உள்ளார்கள். பள்ளி மாணவர் ஹரிகரன் கடற்கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. நண்பர்கள் இருவரும் கடலில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். சிபி சற்று ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறத. இதில் சிபி அலையில் சிக்கிக் கொண்டார்.
இதை கரையில் நின்று பார்த்து கொண்டிருந்த ஹரிகரன் 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என அக்கம் பக்கத்தில் நின்றவர்களை உதவி கேட்டார். உடனே, அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் சிலர் விரைந்து வந்து கடலுக்குள் இறங்கி அலையில் சிக்கிய சிபியை மீட்டனர். அப்போது அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால், அவரை அங்குள்ள ஒரு பாறை மீது படுக்க வைத்தனர். இதற்கிடையே ஒரு ராட்சத அலை எழும்பி பாறையில் இருந்து சிபியை மீண்டும் கடலுக்குள் இழுத்து சென்று விட்டது. எமன் எப்படி வேண்டுமானாலும் வருவார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக இருக்கிறது. எனினும் பொதுமக்கள் விரைவாக செயல்பட்டு அவரை மீட்டனர். ஆனால், அவரை மீட்டு கொண்டு வந்த போது, அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் கடலோர காவல்குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிபியின் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சிபினுடன் குளிக்க இறங்கிய நண்பர் ஸ்ரீராம் அலையில் சிக்கி காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவங்கள் குறித்து கன்னியாகுமரி கடலோர காவல்குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் அலையில் சிக்கிய நிலையில். மீட்கப்பட்ட போதிலும் மீண்டும் அலையில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எச்சரிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள் பொதுவாக ஆழம் அதிகம் நிறைந்த கடற்பகுதியாகும்.கடற்கரைகளில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும். எனவே தப்பித்தவறிக்கூட குளிக்க வேண்டாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications