கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000.. விண்ணப்பத்தை வாங்க போறீங்களா.. முதலில் இதை படிச்சிடுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பம் அளித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளது. மற்ற மாநிலங்களில் கூட இது தேர்தல் வாக்குறுதிகளாக மாறியது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.

You can appeal for Rs.1000 under the Kalaingar Housewives scheme if you are not selected on first attempt

யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காது?:

குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்
ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள்
சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்

மேல்முறையீடு: இந்த கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பம் அளித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

அதாவது நீங்கள் விண்ணப்பம் கொடுக்கிறீர்கள், அது நிராகரிக்கப்படுகிறது என்றால் அதை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்ய முடியும். உங்களிடம் ஆவணங்கள் எல்லாம் முறையாக இருந்து நீங்கள் தகுதியானவராக இருந்தால் நீங்கள் எளிதாக பரிசீலனை செய்ய முடியும்.

இதற்கு என்று ஒரு இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்பதை என்னால் தலை நிமிர்ந்து சொல்ல முடியும்.

கட்டணம் இல்லா பேருந்து பயணம் மூலம் 265 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு உள்ளனர். குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உரிமை தொகையை செப்டம்பர் மாதத்தில் இருந்து தர இருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் 1 கோடி மகளிர் மாதம் முழுக்க 1000 ரூபாய் பெற உள்ளனர்.

You can appeal for Rs.1000 under the Kalaingar Housewives scheme if you are not selected on first attempt

இது இல்லாமல் நான் கலந்து கொண்ட பல கூட்டங்களில் பல முக்கிய உதவிகளை செய்து அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, 63 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றுக்குறையை தற்போது 30 ஆயிரம் கோடியாக குறைத்து உள்ளோம். தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்து உள்ளோம். மாநில உள்நாட்டு உற்பத்தி 6.1 விழுக்காடாக உயர்ந்து உள்ளது. துறை வாரியாக என்னால் சாதனைகளை அடுக்க முடியும். இன்னும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவோம். எங்களுக்கு எதிராக வதந்தி பரப்ப நினைத்தவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர்,..

விண்ணப்பங்கள்: இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட தொடங்கி உள்ளன. ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன. அதேபோல் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தியும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முகாம்கள் வழியாக பெண்களை வழி நடத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+