பல ஆயிரம் ஃபைன்! உங்க கிட்ட ஆதார், பான் கார்டு இருக்கா? வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: ஆதார் கார்டு - பான் கார்டை இணைக்காதவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
நிரந்தர வங்கி எண்தான் பான் எண் ஆகும். நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முதலில் 1 வருடம் அவகாசம். பின்னர் கூடுதலாக 6 மாதம் அவகாசம். அதன்பின் கடந்த மார்ச் வரை 500 ரூபாய் அபாரதத்துடன் அவகாசம், பின்னர் ஜூன் இறுதிவரை 1000 ரூபாய் அபாரதத்துடன் அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் கடந்த மாதம் உறுதியோடு முடிந்துவிட்டது.
பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில்தான் ஆதார் கார்டு - பான் கார்டை இணைக்காதவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பான் அட்டை ஆதார் அட்டையை இணைக்கத்தவர்களுக்கு உங்கள் பான் செயலற்றதாகி விடும். அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.
அதன்படி இந்த மாதம் இறுதிவரை வருமான வரித்துறை ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய முடியும். இதற்கு பான் அட்டை அவசியம். ஆனால் ஆதாருடன் பான் அட்டையை இணைக்கத்தவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. இதனால் அவர்கள் பான் அட்டையை ஆக்டிவேட் செய்ய மனு கொடுக்க வேண்டும். இன்று மனு கொடுத்தால் கூட பான் அட்டை ஆக்டிவேட் ஆக ஒரு மாதம் வரை எடுக்கும்.
இதற்கு ஒரு அபராதம் கட்ட வேண்டும். பான் அட்டை ஆக்டிவேட் ஆகும் முன் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடியும். அதன்பின் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திதான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும். இதனால் மொத்தமாக இரண்டு அபராதம் கட்ட வேண்டி இருக்கும். மொத்த அபராதம் 6 ஆயிரத்திற்கும் மேல் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
பாதிப்புகள்: பான் அட்டை ஆதார் அட்டையை இணைக்கத்தவர்களுக்கு உங்கள் பான் செயலற்றதாகி விடும். அதாவது அந்த எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் பணம் அனுப்புவது தொடங்கி லோன் எடுப்பது, வருமான வரி தாக்கல் செய்வது வரை எல்லாம் சிக்கலாகும். சிக்கலாகும் என்பதை விட மொத்தமாக இந்த பணிகளை செய்வது இயலாத காரியம்.
இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா, வங்கி கணக்கு முடங்குமா என்று இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக ஆர்பிஐ விரைவில் விளக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வட்டார தகவல்களின்படி இனிமேல் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
ஆதார் கார்ட் தற்போது நாட்டில் முக்கியமான அடைய அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியம் ஆகி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications