கண்டிப்பா கனடா போவேன்.. அதான் என் ஆசை... நொறுங்கிய சுபஸ்ரீயின் கனவு.. கதறும் நண்பர்கள்
சுபஸ்ரீயின் கனடா செல்ல இருந்த கனவு நொறுங்கி போய்விட்டது
Recommended Video
சென்னை: சுபஸ்ரீயின் தலையில் மட்டுமல்ல.. கனவிலும் இடியாய் வந்து விழுந்து.. எல்லாவற்றையும் நொறுக்கி நாசம் செய்து காவு வாங்கிவிட்டது பிளக்ஸ் பேனர்!
குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானிநகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள்தான் சுபஸ்ரீ. 23 வயதுடைய சுபஸ்ரீ, பிடெக் படித்துள்ளார். துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வழக்கமாக டூவீலரில்தான் வேலைக்கு போய் வருவார்.

நேற்றும் அப்படி போகும்போதுதான், வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் மேல விழுந்து.. சுபஸ்ரீ கீழே நிலைகுலைந்து விழுந்து.. அந்த நேரம் பார்த்து வேகமாக வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதியது.
இரு கைகளிலும் ஏறிய லாரி, அவரது தலையிலும் ஏறி இறங்கி நின்றது. சுபஸ்ரீயின் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு இரு கைகளாலும் தூக்கி சென்று ஓடியும், வழியிலேயே உயிர் போனது.
உயிரிழந்த சுபஸ்ரீக்கு ஒரே ஒரு கனவு இருந்திருக்கிறது. அது கனடா போவது என்பதுதானாம். வேலை விஷயமோ அல்லது மேல்படிப்போ எதுவானாலும் கனடாவில் சென்று அதை செய்ய வேண்டும் என்றுதான் நீண்ட நாள் ஆசையே. கனடா செல்வதற்காக விண்ணப்பித்திருந்தார். இதற்கான தேர்வை எழுதிவிட்டு தான் டூவீலரில் வரும்போது இந்த விபத்தை சந்தித்துள்ளார்.
கனடா கண்டிப்பா போய்டுவேன், அதான் என் ஆசை என்று அடிக்கடி சுபஸ்ரீ சொல்லி கொண்டே இருப்பாராம், ஆனால் இப்படி அவரது கனவு நொறுங்கி போகும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி கதறி அழுகிறார்கள் நண்பர்கள்!












Click it and Unblock the Notifications