"யாரு சாமி நீ" ஷிகர் தவான் இடத்தை சிரமமின்றி நிரப்பிய சுப்மன் கில்.. உலகக்கோப்பை டிக்கெட் கன்பார்ம்!
சென்னை: நியூசிலாந்து அணிக்கு முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியின் மூலம் சுப்மன் கில் அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இளம் வயதிலேயே இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அண்மையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி இருந்தார்.
இதனால் சுப்மன் கில்லும் தொடக்க வீரருக்கான இடம் கேள்விக் குறியானது. இருந்தும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சுப்மன் கில்லுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தொடரில் ஒரு சதம் விளாசியதோடு, இந்திய அணியின் வெற்றிக்கு அதிக உதவிகளை செய்தார்.

ஷிகர் தவான் - கில்
இருப்பினும் ஷிகர் தவானின் இடத்தை இளம் வீரரான சுப்மன் கில்லால் உலகக்கோப்பைத் தொடரில் நிரப்ப முடியுமா என்ற சந்தேகத்துடனே ரசிகர்கள் இருந்தனர். ஆனால் ஷிகர் தவான் என்ன, இந்திய அணி பேட்ஸ்மேன்கள் யாரை வேண்டுமானாலும் ஈடுசெய்ய முடியும் என்று சுப்மன் கில் இரட்டை சதம் மூலம் நிரூபித்துள்ளார்.

விராட் கோலி
"20 வயதில் சுப்மன் கில்லிடம் இருக்கும் திறமையில் 20% கூட எனக்கு அந்த வயதில் இல்லை" விராட் கோலி சொல்லிய வார்த்தைகள், சுப்மன் கில் மீது ரசிகர்காளிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விராட் கோலி அப்படி சொல்லியதற்கான காரணம், டெக்னிக்கலாக சுப்மன் கில் சிறந்த வீரர் என்பதை முதல் சந்திப்பிலேயே விராட் கோலி அறிந்துகொண்டார்.

அமைதி
அவரின் வளர்த்தியும், ஆடுகளத்திற்கேற்ப ஆட்டத்தை கட்டமைப்பதும் சுப்மன் கில்லுக்கு சிறு வயது முதலே உள்ள திறமை. அவற்றையெல்லாம் கடந்து, மிகப்பெரிய ஆயுதத்தை சுப்மன் கில் தன்னிடத்தில் வைத்துள்ளார். அது ராகுல் டிராவிட், தோனி ஆகியோரிடம் இருக்கும் "அமைதி" தான் அந்த ஆயுதம். இதுவரை எந்த சூழலிலும் சுப்மன் கில் தனது அமைதியை இழந்ததில்லை. எதற்காகவும் அவசரப்படாமல், பேட்டிங்கை கட்டமைக்க கூடியவர் தான் சுப்மன் கில்.

உலகக்கோப்பை திட்டம்
இன்றையப் போட்டியில் கூட எதிர் முனையில் ஆடிய வீரர்கள் ஆட்டமிழந்த போதும், சுப்மன் கில் எந்த இடத்திலும் நிதானம் இழக்காமல் இரட்டை சதத்தை விளாசி இருக்கிறார். இவரை தவிர்த்து இந்திய வீரர்கள் யாரும் அரைசதம் கூட கடக்கவில்லை. அதுதான் சுப்மன் கில் ஆட்டத்தின் ஸ்பெஷல். இந்திய அணியில் தொடர் வாய்ப்பு மற்றும் சிறப்பாக ரன் குவித்து வருவதன் மூலம் உலகக்கோப்பைக்காக திட்டத்தில் சுப்மன் கில் இருப்பது நிச்சயமாகியுள்ளது.

கேஎல் ராகுல் போல் அல்ல
அதேபோல் சீனியர் வீரர்களாக விராட் கோலி 3ம் இடத்திலும், கேஎல் ராகுல் 5ம் இடத்திலும் விளையாடி வருவது இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை அதிகரித்துள்ளது. சுப்மன் கில்லும் உறுதியான ஆட்டம், கீழ் நிலையில் உள்ள வீரர்களுக்கு மேலும் பலத்தை அளித்துள்ளது. எந்த பந்துவீச்சாளரின் கைகளில் இருந்து பந்து வந்தாலும், கேஎல் ராகுல் போல் அல்லாமல் சுப்மன் கில் விக்கெட்டை காப்பாற்ற நினைக்காமல் ஆடுவதே அவரின் ரன்களுக்கு காரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications