பாதி ரிசப்ஷனில்.. மாமியார் வீட்டுக்கு போன மாப்பிள்ளை.. பகீர் காரணம்!
டாக்டர் என்று கூறி இளம்பெண்ணை திருமணம் செய்ய முயன்றவர் கைதானார்
Recommended Video
சென்னை: கோட்-சூட்டுடன், மாலையும் கழுத்துமாக மணமேடையில் நின்று கொண்டிருந்த மாப்பிள்ளையை போலீசார் மாமியார் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர்.
மாதவரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பி.காம் படித்தவர். அவருக்கு கல்யாணத்துக்கு வரன் பார்த்து வந்துள்ளனர். அப்போது, வில்லிவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் என்ற 34 வயது நபர் பெண்ணுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
மாப்பிள்ளை யார் என்ன என்று விசாரித்தபோது, அவர் டாக்டர் என்று அறிமுகப்படுத்தி கொண்டு பெண் வீட்டாரோடு பேசியுள்ளார். இதையடுத்து கடந்த 11ம் தேதி கொளத்தூரில் உள்ள அம்மன் கோயிலில் இருவருக்கும் கல்யாணம் முடிவானது. ரெட்டேரியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது.

ரிசப்ஷன்
அப்போது கல்யாணத்துக்கு வந்திருந்த ஒருவர் "மாப்பிள்ளை நிஜமாவே டாக்டர்தானா? எம்பிபிஎஸ் படிக்காததுபோல கேள்விப்பட்டேன். நீங்க ஒருமுறை யார்கிட்டயாவது கேட்டு தெரிஞ்சிக்குங்க" என்று பெண் வீட்டாரிடம் சொன்னார்.

போலீசார்
இதனால் பதறிய பெண் வீட்டாரும், மணமேடையில் இருந்த மாப்பிள்ளையிடம் இதை பற்றி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலை சொல்லவும், அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீஸ் கன்ட்ரோல் ரூமூக்கு தகவல் சொல்லவும், கொஞ்ச நேரத்தில் மாதவரம் போலீசார், மண்டபத்துக்கு வந்துவிட்டனர்.

கைது
இதை பற்றி கார்த்திக்கிடம் விசாரித்தற்கு, அவர் டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், போரூரில் உள்ள கல்லூரியில் 2 வருஷம் மட்டுமே எம்பிபிஎஸ் படித்து பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர்.

மோசடி
ரிசப்ஷன் பாதியிலேயே நின்றது என்றாலும், இந்த கல்யாண செலவுக்காக மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் 11 லட்சம் வாங்கிவிட்டாராம். இதற்கு மாப்பிள்ளையின் நண்பர்கள் வசந்தி, ஜெயக்குமார், சொக்கலிங்கம் ஆகியோரும் உடந்தை என்று தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications