‛அதிர்ஷ்டம்னா இதுதான்’.. ஒரே மேடையில் 4 பெண்களை திருமணம் செய்த இளைஞர்.. ஹே எப்புட்றா! பரவும் வீடியோ
சென்னை: ஒரே நேரத்தில் 4 பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
திருமணம்.. இன்றைய நாளில் திருமணம் செய்ய ஒவ்வொருவரின் மனதுக்கு பிடித்ததுபோல் ஆணுக்கும், பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கிடைப்பது என்பது அபூர்வமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் முந்தைய காலத்தை ஒப்பிடும்போது தற்போது பெண்களும், ஆண்களும் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர்.

குறிப்பாக ஆண்டுதோறும் உயரும் வயது, பெற்றோர்களின் வற்புறுத்தலால் பலரும் தங்களின் எதிர்ப்பார்ப்பில் பாதியளவு பூர்த்தி செய்த நபர்களை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இணைந்து கொள்கின்றனர். இது ஒரு தரப்பு என்றால் இன்னொரு தரப்பு என்பது வேறு விதமான வாழ்க்கையை நடத்துகின்றனர்.
அதாவது பல ஆண்டுகள் தேடினாலும் கூட பொருத்தமான மணமகன், மணமகள் கிடைக்காத நிலையில் சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றனர். ஒரு காலத்தில் பெண்களுக்கு மணமகன் கிடைக்காத நிலை இருந்த நிலையில் தற்போது ஆண்களுக்கு மணமகள் கிடைக்காத சூழல் உள்ளது. இதனால் பல ஆண்களும் திருமண பந்தத்தில் இணையாமல் தனிமையில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆண்களுக்கு மணப்பெண் கிடைக்காமல் இருக்க 2 காரணங்கள் உள்ளன. இதில் முதல் காரணம் என்பது மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் மணப்பெண் வீட்டாரிடம் இருந்து அதிகளவில் நகை, பணம் எதிர்ப்பார்ப்பது. 2வது விஷயம் தனக்கு கணவராக வருவோர் அல்லது தங்களின் மருமகனாக வரும் நபர் 6 இலக்கத்தில் சம்பளம் பெற வேண்டும் என பெண் வீட்டு தரப்பில் எதிர்பார்ப்பது. இந்த 2 காரணங்களும் தான் பெரும்பாலான ஆண்களுக்கு திருமண வாழ்க்கையை தள்ளிப்போட்டு கொண்டே செல்கிறது.
இப்படி திருமணத்துக்கு ஒரு பெண் கூட கிடைக்காமல் பல ஆண்கள் புலம்பி கொண்டிருக்கும் வேளையில் தான் இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் 4 இளம்பெண்களை திருமணம் செய்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. உண்மையிலேயே இது நடந்துள்ளது. வெள்ளை நிற கோர்ட் சூட் அணிந்து, தலையில் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து கழுத்தில் மாலையிட்டு சிரித்த முகத்துடன் இருக்கும் அந்த இளைஞர் 4 பெண்களை குடும்பத்தினர் சூழ உறவினர்கள் முன்னிலையில் ஒரே மேடையில் திருமணம் செய்தார்.

அதன்பிறகு அந்த இளைஞர் பூரித்த முகத்துடன் அக்னியை தனது 4 மனைவிகளுடன் சுற்றி வரும் நிலையில் அங்கு இருப்பவர்கள் பூக்களை தூவி வாழ்த்து தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் சிலர், ‛‛ஒரு மனைவியையே என்னால் சமாளிக்க முடியவில்லை. 4 மனைவியை எப்படி சமாளிக்க போகிறீர்கள்? உண்மையிலேயே உங்களின் தைரியத்திற்கு பாராட்டுகள்.. வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலர், ‛‛அதிர்ஷ்டம் என்றால் இதுதான்.. வாழ்த்துகள்'' என கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படி வைரலாக பரவி வரும் இந்த வீடியோ எப்போது? எங்கு எடுக்கப்பட்டது? என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இருப்பினும் வீடியோ மட்டும் வலைதளங்களில் வேகமாக பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications