தண்ணீர் கேன் பத்திரம்.. சென்னையில் இதையும் திருடுகிறார்கள்!
சென்னையில் தண்ணீர் கேன்களை இளைஞர் ஒருவர் திருடி செல்லும் வீடியோ வைரலாகிறது
Recommended Video
சென்னை: விடிகாலை 4 மணிக்குதான் அந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது. திருடியதற்கான ஆதாரமும் காமிராவில் பளிச்சென உள்ளது. இந்த வீடியோ காட்சிதான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. திருடன் அப்படி திருடி கொண்டு போனது என்ன தெரியுமா? குடிக்கிற தண்ணியைதான்!
இந்த முறை தமிழகத்தில் சரியாக மழை இல்லை. சாலைகளில் நீர் பெருக்கெடுத்ததே தவிர, முக்கிய ஏரிகள் நிரம்பவில்லை.
ஏரிகளை நிரப்பும் அளவுக்கு மழை பெய்யாது என்றும் இதே நிலை நீடித்தால், இன்னும் 3 மாதத்தில் சென்னைக்கு கடுமையான குடிநீர் பஞ்சம் வந்து சூழும் என்று வானிலை ஆர்வலர்கள் எச்சரித்திருந்தனர். அதன்படியே குடிநீர் பஞ்சம் இப்போது வந்துவிட்டது! அதற்கான போராட்டங்களையும் சென்னைவாசிகள் ஆங்காங்கே ஆரம்பித்து விட்டார்கள்.

விடிகாலை
இந்நிலையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ சம்பவம் சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் நடந்துள்ளது. நேரம் விடிகாலை 4 மணி. ஒரு ஹோட்டல் முன்பு நிறைய தண்ணீர் கேன்களை அடுக்கி வைத்துள்ளனர்.

கேன்கள்
அப்போது ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது. அதிலிருந்து டீக்காக டிரஸ் பண்ணிய நபர் ஒருவர் கேஷுவலாக இறங்கி வருகிறார். ஒரு கேனை தூக்கி ஆட்டோவில் வைக்கிறார். இப்படியே அடுத்தடுத்து கேன்களையும் எடுத்து ஆட்டோவில் வைக்கிறார்.

வீடியோ பதிவு
திருடுகிறோம் என்ற குற்ற உணர்ச்சியோ, பயமோ, பதட்டமோ அவரிடம் கொஞ்சம்கூட தெரியவில்லை. இவருக்கு இதேதான் பொழப்பாம். இந்த சம்பவம் கடந்த 7-ம் தேதி நடந்ததாக அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

சூளைமேடு
ஆனால் ஒருத்தர்கூட இது சம்பந்தமாக சூளைமேடு போலீசில் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நபர் யார், எவ்வளவு நாளாக தண்ணீர் கேனை திருடி கொண்டு போகிறார், தண்ணியை எங்கே கொண்டு போகிறார், சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் ஏன் இது பற்றி புகார் தரவில்லை என்ற விஷயங்களை போலீசார்தான் இனி விசாரித்து வெளிக் கொணர வேண்டும்!
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications