ஓயோ ஓட்டல் ரூமில் சிக்கிய பெண்.. சுவர் எகிறி குதித்து தப்பியோட்டம்! உறைந்து நின்ற கணவன், 2 பிள்ளைகள்
சென்னை: கள்ளக்காதல்கள் அட்டகாசங்கள் இந்தியா முழுவதிலுமே பெருகி வரும் சூழ்நிலையில், குடும்ப உறவுகளும் சிதைந்து கொண்டிருக்கின்றன.. கள்ளக்காதல் வன்முறைகள் பெருகுவதால்., அதுசம்பந்தமான குற்றங்களும் பெருகுகின்றன.. இதோ உத்தர பிரதேசத்தில் தகாத உறவில் ஈடுபட்டு, மீண்டும் ஒருவர் பொதுவெளியில் அம்பலப்பட்டுள்ளார்.. அதிலும் மணமான பெண் ஒருவர், ஒட்டுமொத்த பேரின் முன்னிலையிலும் அசிங்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது உத்தரபிரதேசத்தில்?
கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.. பராத் என்ற பகுதியில் ஓயோ ஓட்டல் செயல்பட்டு வருகிறது.. திருமணமான பெண், தன்னுடைய கள்ளக்காதலனுடன் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள்.

எகிறி தப்பி ஓட்டம்
இந்த தகவல் அப்பெண்ணின் கணவருக்கு தெரிந்துவிடவும், தன்னுடைய அம்மாவையும், போலீஸாரையும் அழைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட ஓட்டல் ரூமுக்கே சென்றார்.. இதனை அறையிலிருந்த அந்த பெண் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
உடனே தன்னுடைய துப்பட்டாவில் முகத்தை மூடிக்கொண்டு, ஹோட்டலின் பின்புற ஜன்னல் வழியாக வெளியேறி, 12 அடி உயரத்திலிருந்து கீழே எகிறி குதித்து தப்பி ஓடினார்.. இந்த பெண் தப்பி ஓடுவதை கணவர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுக்கவும், அதை மாமியார் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்.. இதற்கு பிறகு இந்த செய்தி என்ன ஆனது என்று தெரியவில்லை.
கள்ளக்காதலனுக்கு பிறந்தநாள்
இந்தநிலையில் அதேபோன்ற சம்பவம், அதே உத்தர பிரதேச மாநிலத்தில், அதே ஓயோ ஓட்டல் ரூமில் நடந்துள்ளது.. மீரட்டில் உள்ள ஓயோ ஓட்டலில் திருமணமான பெண் ஒருவர் தன்னுடைய கள்ளக்காதலனுடன் ஹோட்டல் அறையில் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்..
பிறகு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, திடீரென அந்த பெண்ணின் கணவர், 2 குழந்தைகளுடன் அங்கே வந்துவிட்டார்.. இதனையறிந்த அந்த பெண் அரைகுறை ஆடையுடனே, ஹோட்டல் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடியிருக்கிறார்.. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஓயோ ரூம்கள்
சமீபகாலமாகவே, ஓயோ ரூம்களை சிலர் தவறான முறைகளில் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.. மேலும், திருமணமாகாத 18 வயதுக்கு உட்பட்ட தம்பதிகள், ஓயோ ரூம்களை தவறாக பயன்படுத்துவது கலாச்சார சீர்கேடு என்ற விமர்சனங்கள் அதிகரித்தன..
அதனால்தான் 5 மாதங்களுக்கு முன்பு, (OYO) ஓயோ ரூம்களின் விதிகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டது.. அதன்படி திருமணமாகாத தம்பதிகள், இனி செக்-இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஓயோவில் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் உட்பட அனைத்து ஜோடிகளும் செக்-இன் செய்யும்போது, தங்கள் உறவின் ஆதாரத்தை வழங்க வேண்டும்.
ஆதார் அட்டை - சான்றிதழ்கள்
ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் போன்றவை மட்டுமே அடையாள சான்றிதழ்களாக ஏற்றுக்கொள்ளப்படும். பான் கார்டில் முகவரி இல்லாததால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. அறையில் தங்க வரும்போது அடையாள அட்டையின் அசல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்" என்றெல்லாம் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டன.
எனினும், இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன.. மற்ற ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது, ஓயோ ரூம்கள் குறைந்த வாடகை விகிதத்தில் வழங்கப்படுவதாலும், பாதுகாப்பானது என்ற நம்பப்படுவதாலும்தான், பெரும்பாலானோர், பயன்படுத்துகிறார்களாம்..
தொடர் வீடியோக்கள்
ஓயோவை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் பதிவு செய்த ஹோட்டல்களில் போலீசார் வாரண்ட் எதுவுமின்றி சோதனை செய்ய முடியாது. அது மனித உரிமை மீறலாகவே கருதப்படும்.. அதுவும், 18 வயதுக்கு மேல் ஆகியிருந்தால், கைது நடவடிக்கையும் கிடையாது.. இதுபோன்ற விஷயங்களைதான், ஒருசிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
ஆனால், திருமணமான பெண்கள், ஒழுக்கக்கேடாக நடந்து, ஓட்டல் சுவர் எகிறி குதித்து ஓடுவதை, அவரது 2 பிள்ளைகளுமே கண்ணெதிரே பார்த்துள்ளனர்.. அவர்கள் தங்களது பெற்ற தாயை பற்றி என்ன நினைத்திருப்பார்களோ???












Click it and Unblock the Notifications