அண்ணியும்.. மைத்துனனும் சேர்ந்து.. காட்டி கொடுத்த கண்ணாடி வளையல்.. இப்ப ஜெயிலில்!
நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
சென்னை: மச்சினன் ராஜேஷுடன் சேர்ந்து ரேவதி செய்த காரியம் இருக்கே.. போலீசாரே அதிர்ந்து விட்டனர்.. ரேவதியின் வளையல்தான் மொத்த வண்டவாளத்தையும் வெளியே கொண்டுவந்துள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவருக்கு 42 வயதாகிறது.. வீட்டுக்கு அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார்.. கடந்த 6-ம் தேதி மதியம் கடையில் இவர் இருந்தபோது, அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது.
இந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் மளிகை சாமான் வாங்குவதை போல வந்து, திடீரென பேச்சியம்மாளின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து இழுத்தார்.. இதை கொஞ்சமும் எதிர்பாராத பேச்சியம்மாள், அந்த செயினை கெட்டியாக பிடித்து கொண்டு இளைஞரிடம் போராடினார்.. ஆனால் இளைஞர் செயினை அறுத்து கொண்டு ஓடினார்.. பேச்சியம்மாள் அலறி கத்தினார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் இளைஞர் தப்பிவிட்டார்.

சிசிடிவி கேமிரா
இந்த திருட்டு சம்பந்தமாக அம்பத்தூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் திருட்டு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போதுதான், பேச்சியம்மாளின் செயினை பறித்து ஓடிய இளைஞர் ஒரு பைக்கில் ஏறி செல்வது தெரிந்தது. பைக்கை ஓட்டியவர் ஹெல்மட், ரெயின்கோட் போட்டிருந்தார்.. இளைஞர் பின்னால் ஏறி உட்காரவும் பைக் பறந்தது.. இதையடுத்து அந்த பைக் செல்லும் வழியெல்லாம் இருந்த 64 சிசிடிவி கேமிராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

வாகன சோதனை
அப்போது பைக் வில்லிவாக்கம் சப்-வே பக்கம் திரும்பிவிட்டது. இதற்கு பிறகு தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், நேற்று, சிசிடிவியில் பார்த்த அதே கலர் பைக் வந்தது.. ஒரு பெண் ஓட்டி கொண்டு வந்தார்.. அவரை வழிமறித்து போலீசார் விசாரித்தனர். முகத்தில் எந்தவித சலனமும், பயமும், பதட்டமும் இன்றி பெண் பதிலளித்தார்.

வளையல்
அப்போதுதான், போலீசார் பெண்ணின் கையில் இருந்த வளையலை கவனித்தார்.. சிசிடிவியில் பைக் ஓட்டியவர் வளையலை போலவே அந்த வளையலும் இருந்தது.. உடனே போலீசார் அந்த பெண்ணை, விசாரிக்க வேண்டும் என்று சொல்லி ஸ்டேஷன் அழைத்து வந்தனர். அப்போதுதான் பேச்சியம்மாளிடம் நகையை பறித்த உண்மையும் வெளிப்பட்டது.. இந்த பெண்ணின் பெயர் ரேவதி, 30 வயதாகிறது.. வில்லிவாக்கம், நாராயண மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர்.. கணவன் பெயர் ஜெயசந்திரன்.. ஐசிஎப்.பில் உள்ள, பெட்ரோல் பங்க்-கில் மேனேஜராக வேலை பார்க்கிறார்.

ரேவதி
கொள்ளையடிக்க உதவியது இவரது மச்சினன் ராஜேஷ்.. அவருக்கு வயது 31 ஆகிறது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மூன்றரை பவுன் செயின், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. ரேவதிக்கு டூ வீலருக்கான கடன் இருக்கிறதாம்.. அந்த கடனை அடைக்கதான், ஆண் வேடமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கைது
மழை காலங்களில் இவருக்கு திருடுவது ரொம்பவும் எளிது.. இதற்காக ரெயின் கோட்டு கூட வாங்கி வைத்துள்ளார்.. ஆண்கள் போல டிரஸ் அணிந்து, ஹெல்மெட் போட்டுக் கொண்டால் எளிதில் அடையாளம் தெரிவதில்லை. இப்போது அண்ணியும் - மச்சினனும் ஜெயிலில் உள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications