சீரழிச்சுட்டாரு.. நாசம் பண்ணிட்டாரு.. என் சாவுக்கு செல்வராஜ்தான் காரணம்.. விடாதீங்க.. கதறும் பெண்
Recommended Video
சென்னை: "என் வாழ்க்கையே சீரழிச்சு நாசம் பண்ணிட்டாரு.. என் சாவுக்கு செல்வராஜ்தான் காரணம்.. அவரை சும்மா விடாதீங்க" என்று ஒரு பெண் கண்ணீர் மல்க பேசும் வீடியோ வைரலாகி வருகிறது
அந்த வீடியோவில் பெண் ஒருவர் அழுதுகொண்டே திமுக பிரமுகர் மீது புகார் அளிக்கிறார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது:
"என் பேர் பூமா.. நான் வாணியம்பாடியில இருக்கேன். என்னுடைய சாவுக்கு காரணம் திமுக முன்னாள் சேர்மன் ஏ.செல்வராஜ்தான்!

நாசம் பண்ணிட்டாரு
அவர் பொய் சொல்லி ஏமாத்தி என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாரு. என் வீட்டில உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லிட்டாங்க. ஏற்கனவே அவருக்கு ஒரு லேடி கூட தொடர்பு இருந்தது. ஆனா அந்த தொடர்பை விட்டுட்டேன்னு என்கிட்ட சொன்னாரு.

இன்னொரு லேடி
ஆனா இப்போ இன்னொரு லேடி கூட கள்ளத்தொடர்பு வெச்சிருக்கார். அந்த லேடிக்கு கல்யாணம் ஆகி 2 ஆம்பிளை பசங்க இருக்காங்க. அவங்களுக்கும் அறிவு இருக்கணும் இல்லை. இந்த லேடி இருக்கும்போது எதுக்காக என்கிட்ட பொய் சொல்லி என்னை நாசம் பண்ணனும்? ஆனா கேட்டால் இல்லைன்னு சொல்றாரு.

ஜெயிக்க வெக்காதீங்க
முனிசிபாலிட்டில நிறைய பணத்தை கொள்ளை அடிச்சிட்டு போய் அந்த லேடிக்கு வீடு கட்டி தந்திருக்காரு. கார் வாங்கி தந்திருக்காரு. 100 சவரன் நகை வாங்கி தருவாரு. திரும்பவும் இப்போ எலக்ஷன்ல நிக்க போறாரு. திரும்பவும் அவருக்கு ஓட்டு போட்டு அவரை ஜெயிக்க வெச்சு சேர்மன் ஆக்க போறீங்களா? அப்படிப்பட்ட முட்டாள்தனமான வேலையெல்லாம் செஞ்சிடாதீங்க.

தேர்தல்
அவர் வீட்டுக்கு பின்னாடிதான் என் வீடு இருக்கு. அவர் கூட எடுத்த போட்டோ எல்லாம் இதோ பாருங்க. ஆனா என் சாவுக்கு காரணம் அவர்தான்.. அவரை சும்மா விடாதீங்க!" என்று சொல்லி முடிக்கிறார்.

உண்மை என்ன?
இந்த பெண்ணின் வீடியோவில் உள்ள உண்மை தன்மை நமக்கு முழுவதுமாக தெரியவில்லை. ஒருவேளை பெண்ணின் கண்ணீர் உண்மையாக இருந்தால் தீவிர நடவடிக்கை சம்பந்தப்பட்டவர் மீது எடுத்தாக வேண்டியது அவசியமாகிறது.

தேர்தல் சமயம்
மற்றொரு புறம்.. இது தேர்தல் சமயம். ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஆளுக்கொரு பக்கம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்களை அளிக்கிறார்கள். கதிர்காமு தொடங்கி திமுக பிரமுகர் வரை இந்த பிரச்சனை வருகிறது. இவ்வளவு காலம் இந்த பெண்கள் எல்லாம் சும்மா இருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் இவர்கள் வெளியே வந்து புகார் சொல்ல என்ன காரணம்? என்றும் தெரியவில்லை. எனவே இதுகுறித்த உண்மைதன்மையை போலீசார்தான் வெளிக் கொணர வேண்டும்.

சுய ஒழுக்கம்
எப்படி பார்த்தாலும், ஆண், பெண் இருவருக்குமே சுய ஒழுக்கம் ரொம்பவும் அவசியமாகிறது. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... இப்படிப்பட்ட வைரல் வீடியோக்கள் மூலம், இவ்வளவு காலம் சேர்த்து வைத்த ஒட்டுமொத்த பெயரும் நாசமாகி, மானம் காற்றில் வேகமாக பறந்துபோய்விடுவதுதான் மிச்சம் ஆகிறது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications