குறும்படத்தில் ஆர்வம் கொண்ட கணவர்.. சோஷியல் மீடியாவில் பொழுதுபோக்கு.. மனைவி தற்கொலை
சென்னை: சென்னையில் கணவர் வேலைக்குச் செல்லாமல் குறும்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூர் நீலம் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கும் கீர்த்தனா என்ற பெண்ணுக்கும் காதல் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த கீர்த்தனா, தாய், தந்தை இல்லாமல் பாட்டியின் ஆதரவில் வளர்ந்தவர்.

கடையில் பணியாற்றிய பெண்
கீர்த்தனா பல்பொருள் அங்காடி கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். ஆனால் ராமசந்திரன் குறும்படம் எடுப்பதிலேயே ஆர்வம் காட்டி அதை சமூகவலைதளங்களில் போடுவதிலேயே ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கீர்த்தனா மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

பேசுவதே இல்லை
இதனால் கணவருடன் கீர்த்தனா பேசுவதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயக்க நிலையில் இருந்த கீர்த்தனாவை உடனடியாக மீட்ட ராமசந்திரன் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

பெண் பலி
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கீர்த்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து திருவிக நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருமணமாகி 6 மாதங்கள்
திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால் இந்த வழக்கை ஆர்டிஓ விசாரணைக்கு செம்பியம் உதவி ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். தாய், தந்தை இல்லாமல் வளர்ந்த கீர்த்தனா கணவரின் செயல்களை யாரிடம் சொல்வது என தெரியாமல் மனத்திற்குள் போட்டு வேதனையில் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம்












Click it and Unblock the Notifications