ஹனிமூன் கூட ஒழுங்கா முடியலை.. அடித்து உதைத்து.. சித்திரவதை செய்து.. ராதாவின் பரிதாப முடிவு!
23 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
சென்னை: வீட்டை விட்டு ஓடிப்போய் காதலனை கரம் பிடித்தார் ராதா.. ஆனால், ஹனிமூன்கூட ஒழுங்கா முடியவில்லை.. ஒரு சில நாட்களிலேயே ராதாவை அடித்து.. உதைத்து.. சித்ரவதை செய்து.. கடைசியில் தூக்கு போட்டு தற்கொலை வரை கொண்டு வந்துவிட்டுவிட்டனர் துரோகிகள்!
சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்தவர் 62 வயது ராஜா... ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் மருத்துவ அலுவலர்.. இவரது மகள் ராதா. 23 வயதாகிறது.
படித்து முடித்துவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு வருடமாக சாலிகிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற 27 வயது இளைஞரையும் காதலித்து வந்துள்ளார்.

பாலாஜி
இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து இரு தரப்புமே எதிர்ப்பு சொல்லவும், போன மாசம் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டனர். இதனால், சில நாட்கள் நண்பர்கள் வீட்டிலேயே புதுமண ஜோடி தங்கியது. ஆனால், தாலி கட்டிய ஓரிரு நாட்களிலேயே பாலாஜியின் கோர முகம் வெளிப்பட்டது.. தினமும் தண்ணி.. அடி உதை, ரகளை.. என ஆரம்பித்தார்.

தகராறு
இது எல்லாம் போதாதென்று தன்னை நம்பி வந்த பெண்ணின் நடத்தையிலும் சந்தேகப்பட ஆரம்பித்தார். கண்மூடித்தனமாக குடிவெறியில் அந்த பெண்ணை அடித்து நொறுக்கினார். இந்த சமயத்தில் மகனின் திருமணத்தை பாலாஜியின் தந்தை ஏற்று கொண்டார், மேலும் ராதாவின் பெற்றோரிடம் சென்று சமாதானம் பேசினார்.

ஒப்படைத்தார்
அப்போது, முறைப்படி இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்லி, ராதாவை அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தார் பாலாஜியின் அப்பா! மகனையும் தன்னுடனேயே அழைத்து சென்றுவிட்டார். ஆனால், இதற்கு பிறகு பாலாஜி, ராதாவை பார்க்க வரவே இல்லை.. பேசுவதையும் தவிர்த்தார்.. அதனால் பாலாஜி வீட்டுக்கு ராதா கிளம்பி சென்றார்.

தற்கொலை
அப்போதுதான், பாலாஜியின் அப்பாவின் சுயரூபமும் தெரிந்தது.. ராதாவை அடித்து உதைத்து அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.. இதனால் மனம் நொந்துபோய் வீட்டுக்கு வந்த ராதா, யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கில் தொங்கிவிட்டார். தகவலறிந்து ஆவடி டேங்க பேக்டரி போலீசார், விசாரித்து வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications