சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மின்சார வயர் அருகே செல்போன் பேசிய இளம் பெண்.. அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி.. பரபரத்த தாம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: தாம்பரம் அருகே பவர் பேங் பயன்படுத்தி செல்போன் பேசிக்கொண்டு இருந்த வடமாநில இளம்பெண் 110 கிலோ வாட் மின்சாரம் செல்லும் வயர் அருகே சென்ற போது மின்சாரம் உடலில் பாய்ந்தது. இதில் 70 சதவீதம் தீக்காயம் அடைந்த இளம்பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாடியில் நின்ற இளம் பெண் மீது மின்சாரம் பாய்ந்தது என்ற விவரங்களை இங்கே காணலாம்.

தாம்பரத்தில் பவர் பேங்க் பயன்படுத்தி செல்போன் பேசிய போது திடீரென மின்சார பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் 70 சதவீதம் தீக்காயம் அடைந்த இளம்பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு? இதையெல்லாம் மாடு பார்த்தா ஆத்திரத்தில்.. இணையத்தை கலக்கும் மாடு மீம்ஸ்! நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு? இதையெல்லாம் மாடு பார்த்தா ஆத்திரத்தில்.. இணையத்தை கலக்கும் மாடு மீம்ஸ்!

மெப்ஸ் ஏற்றுமதி நிறுவனம்

மெப்ஸ் ஏற்றுமதி நிறுவனம்

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சானடோடரியம் பகுதியில் மெப்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் வளாகத்தில் ஏராளமான தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்ந நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மேற்கு தம்பரம், கடப்பேரி திருநீர்மலை சாலைப்பகுதியில் வசித்து வருகின்றனர். இதில் திருநீர்மலை சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

110 கிலோவாட் உயர் அழுத்த மின் கம்பி

110 கிலோவாட் உயர் அழுத்த மின் கம்பி

இந்த பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தின் வருகே துணை மின் நிலையத்திற்கு செல்லும் 110 கிலோவாட் உயர் அழுத்த மின்சார கம்பி செல்கிறது. இந்தக் கட்டிடத்தின் முதல் மாடியில் கிரில்கள் இருந்து உள்ளது. ஆனால், தற்போது பெயிண்ட் பூசுவதற்காக இந்த கிரில்லை அகற்றி வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அங்குள்ள விடுதி அறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கும் கும் குமாரி என்ற 19 வயது இளம்பெண்ணும் தங்கியுள்ளார்.

பவர் பேங்க் மூலம்

பவர் பேங்க் மூலம்

கும் கும் குமாரி தனது செல்போனில் சார்ஜ் குறைவாக இருந்ததால் பவர் பேங்க் மூலம் சார்ஜ் போட்டபடியே செல்போனில் பேசிக்கொண்டு மாடிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது மாடியில் காயப்ப்போட்டு இருந்த துணி காற்றில் கீழே விழுந்துள்ளது. இதை எடுப்பதற்காக பிளாஸ்டிக் நாற்காலி போட்டு ஏறி உயர் அழுத்த மின்சார கம்பி செல்லும் பகுதி அருகே சென்று இருக்கிறார். அப்போது செல்போன் கதிர்வீச்சு மூலமாக பாய்ந்த மின்சாரம் கும் கும் முகாரி மீதும் பாய்ந்துள்ளது. இதில் 70 சதவீதம் மின்சாரம் பாய்ந்தது பலத்த தீக்காயம் அடைந்தார்.

போலீசார் வழக்கு பதிவு

போலீசார் வழக்கு பதிவு

நொடிப்பொழுதில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பயங்கர சத்தமும் கேட்டுள்ளது. விடுதி அறை முழுவதும் மின்சாரமும் பாயந்ததாக சொல்லப்படுகிறது. சத்தம் கேட்டதால் அறையில் தங்கியிருந்த 20 வயதான பூனம், 24 வயதான ஊர்மிளா குமாரி ஆகிய 2 பெண்களும் மாடிக்கு வந்துள்ளனர். அதில் இவர்கள் இரண்டு பேர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் லேசான காயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த கும் கும் குமாரி கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபத்தான நிலையில்..

ஆபத்தான நிலையில்..

தடயவியல் ஆய்வு நிபுணர்களும் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் விடுதி மேலாளர் கணேஷ், கட்டிட உரிமையாளர் நடராஜ், விடுதி வாடர்ன் தமிழகி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பேசியபடி மாடிக்கு சென்ற போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A young woman from Uttar Pradesh who was using a power bank near Tambaram and was talking on her cell phone was electrocuted when she went near a 110 kilowatt electric wire. The young girl suffered 70 percent burns and is being treated at the Kilpauk Government Hospital. You can see the details of the young woman standing on the floor being electrocuted here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X